பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1074

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paint programme

1073

palette register


இயக்கப் பாதையினைக் காட்சியாகக் காட்டுதல். 2. கணினி வரைகலையில் தேர்ந்தெடுத்த பரப்பினை ஒரு திண்ணிய வண்ணத்தால் நிரப்புதல். 3. ஒரு காட்சித்திரையில் வரைகலைத் தரவுகளைக் காட்சியாகக் காட்டும் செய்முறை.

வண்ணப்படுத்தும் நிரல் தொடர்

paint programme : வண்ணப்படுத்தும் நிரல்தொடர் : வரை கலை பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தித் திரையில் ஒவியம் வரைவதுபோலச் செய்யும் வரைகலை நிரல் தொடர். ராஸ்டர் கிராஃபிக் உருவங்களை வண்ணப்படுத்தும் நிரல் தொடர் மூலம் உருவாக்கலாம்.

PAL : பிஏஎல் : "நிலை மாற்ற வரி" எனப் பொருள்படும்"Phase Alternation Line"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துச் சுருக்கம். பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வண்ணத் தொலைக் காட்சிப் பொறியமைவு.

palatino : வண்னத் தட்டு : பல போஸ்ட்ஸ்கிரிப்ட் லேசர் அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் உள்ள்மைந்த அச்செழுத்து.

palette : வண்ணத் தொகுதி;வண்னத் தட்டு : ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் அமைந்திருக்கக்கூடிய வண்ணங்களின் தொகுதி.

palette code : வண்ணத் தட்டு குறியீடு : கிடைத்துள்ள வண்ணத்தட்டி லிருந்து குறிப்பிட்ட நிறத்துடன் தொடர்புள்ள ஒரு எண்.

palette register : வண்ணத் தட்டு பதிவேடு : ஈஜிஏ (EGA) அல்லது பிசிஜே ஆரில் உள்ள 16 பதிவேடுகளில் ஒன்று. காட்சி நினைவகத்தில் வருகின்ற நிறத்திற்குத் தொடர்பான நிறத்தைத் திரையில் காட்டுகின்ற பதிவேடு.



68