பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

platform-dependant

1122

PLCC


platform-dependent : பணித்தளம் சார்ந்த.

platform independant : பணித்தளம் சாராமை.

platform independent development environment : பணித்தளம் சாரா உருவாக்கச் சூழல்.

platform independent language : பணித் தளம் சாரா மொழி.ஜாவா மொழியை இவ்வாறு சிறப்பித்துக் கூறுவர்.

PLATO : பிளேட்டோ : "தானியக்கப் போதனைச் செயற்பாடுகளுக்கான செயல்முறைப்படுத்திய தருக்கமுறை" எனப் பொருள்படும்"Programmed Logic for Automatic Teaching Operations"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும் பெயர். இது, கணினி அடிப்படையிலான அறிவுறுத்தப் பொறியமைவு. இது பெரிய கணினிகளிலும், படிகக்காட்சி முனையங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. இதில் கிண்டர்கார்டன் முதல் பட்டப்படிப்பு வரையிலான மாணவர் களுக்கான பல்லாயிரம் பாடங்கள் அடங்கியுள்ளன.

platter : வட்டத்தட்டு : வட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி. இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்புகளிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது.

இணைவான இரு வட்டத்தட்டுகள்

வட்டுத் தட்டு

வட்டுத் தட்டு

play button : இயக்குக் குமிழ்.

player : இயக்கி.

PL/C : பீஎல்/சி : PL/I என்ற செயல்முறைப்படுத்தும் மொழியின் ஒரு பதிப்பு. இது கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

PLCC : பீஎல்சிசி : ஈயமற்ற பிளாஸ்டிக் சிப்புச் சுமப்பி என்ற பொருள்படும் Plastic Leadless Chip Carrier என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்

பெயர். பலகைகளில் சிப்புகளைப் பொருத்துவதில் பின்பற்றப்படும் ஈயமற்ற சிப்பு சுமப்பி முறையின் ஒரு வேறு