பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1467

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

TPI

1466

tracing routine


கோபுரம்


முகப்பும், விசைப்பலகையும் மேசைமீது வைக்கப்படும்.

TPI : டீபீ. ஐ : tracks per inch என்பதன் குறும்பெயர். காந்த வட்டுகளில் சேமிப்பின் அடர்த்தியை அளக்கப் பயன்படுத்தப்படுவது.

TP monitor : டீபீ கண்காணிப்பி : தொலை செயலாக்கம் (Tele processing) அல்லது பரிமாற்றச் செயலாக்கம் (Transaction Processing) என்பதன் சுருக்கம். முனையங்களுக்கும் (அல்லது கிளையன்களுக்கும்), பெருமுகக் கணினிக்கும் (அல்லது வழங்கனுக்கும்) இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்பாடு செய்யும் ஒரு நிரல். ஒன்று அல்லது மேற்பட்ட நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கப் (OLTP) பயன்பாடுகளுக்கு முரணில்லாச் சூழலை வழங்குகின்றன.

. tr : . டீஆர் : ஒர் இணைய தள முகவரி துருக்கி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

trace : தேடு ; சுவடு ; பதி வடையாளம் : 1. பரவு காட்சித் திரையில், ஒளிக் கற்றையின் பாதையை வருடல் (scan) செய்வது. 2. மின்னணு பாகங் களை மின்சுற்று அட்டைகளில் இணைக்கும் மின்னோட்டப் பாதை.

trace dependents : சார்புகளைத் தேடு : எம்எஸ் எக்ஸெல்லில் ஒரு கட்டளை.

trace error : பிழை தேடு.

trace precedents : முன் காரணிகளைத் தேடு : எம்எஸ் எக்ஸெல்லில் ஒரு கட்டளை.

tracing routine : தேடும் வாலாயம் : ஒரு நிரல்தொடரின் இயக்கத்தின்போது கணினி இயக்கப் பதிவகங்களில் அடங்கியிருப்பவற்றின் நேரப்படியான