பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1474

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

transient state

1473

transistor logic


செயல் முறை : கணினி அமைப்பின் முதன்மை நினைவகத்தில் தங்காத நிரல் தொடர். தேவைப்படும்போது நாடா அல்லது வட்டிலிருந்து நிரல் தொடர்களை கணினி படிக்கும்.

transient state : மாறும்நிலை : ஒரு சாதனம் அதன் முறைகளை மாற்றும் சரியான நேரம். சான்று : 0 முதல் 1-க்கு அல்லது அனுப்புதலில் இருந்து பெறுதலுக்கு.

transient suppressors : மாறும் அழுத்திகள்;மாறுநிலை ஒடுக்கி : சிறு வோல்டேஜ் பிழைகளை சமாளிக்கும் சாதனம். நிலையான மின்னோட் டத்தைத் தருகிறது. குறுகிய நேர உயர்வோல்டேஜ் சமயங்களில் கருவிகளை அழுத்திகள் பாதுகாக்கின்றன.

transistor : டிரான்சிஸ்டர்;மின்மப் பெருக்கி : இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base). (2) உமிழி (emitor). (3) திரட்டி (collector). இதில் பாயும் மின்னழுத்தம் (Voltage) அல்லது மின்னோட்டம் (Current) வேறொரு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும். மின்மப் பெருக்கி பல்வேறு பணிகளைச் செய்கிறது. (எ. டு) திறன்பெருக்கி (amplifier), நிலை மாற்றி (switch), அதிர்வி (oscillator). நவீன மின்னணுவியலில் தவிர்க்கப்பட முடியாத மிக அடிப்படையான பொருள் கூறு ஆகும்.

transistor : transistor logic (TTL) : மின்மப் பொறி-மின்மத் தருக்க அளவை (டீடீஎல்) : இரு துருவ சாதனங்களின் மூலம் குறைந்த சக்திகளும் அதிவேக அளவை மின்சுற்றுகளால் உருவாக்கப்படும் ஒருங்கிணைந்த மின்

பலவகையான மின்மப் பொறிகள்