பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

form

104

free


உருவாக்கி, இதை ஓர் ஆவணத்திற்குப் பயன்படுத்தலாம். வரி இடைவெளிவிடல், பத்தி வரிசையாக்கம், ஒதுக்கிச் செய்தல் ஆகியவை இதில் தேவையற்றவை.

formatting changes - படிவமைப்பு மாற்றங்கள் : இவை பாட நடையை மாற்றுபவை. எழுத்து பெரியதாகவும் சாய்ந்ததாகவும் இருக்கும். அளவு, நிறம் முதலியவை எழுத்துப் பண்புகள். இவற்றை வேண்டியவாறு பயன்படுத்தலாம்.

formatting, kinds of - படிவமைப்பு வகைகள் : 1. பாடப் படிவமைப்பு. 2. பக்கப் படிவமைப்பு. விரிவு அவ்வப்பதிவில் காண்க.

formatting, text - பாடப்படிவம் அமைத்தல் : இது இரு வகை. 1. வன்படிவம் அமைத்தல், 2. மென்படிவம் அமைத்தல்.

FORTH-போர்த் : ஓர் உயர்நிலை நிகழ்நிரல் மொழி. விரைவு மிகுதி. நினைவகத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்.

FORTRAN - பார்ட்ரான் : ஓர் உயர் நிலை மொழி. அனைத்துலக வணிக எந்திரத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. எண் பயன்பாடு, அறிவியல் பயன்பாடு ஆகியவற்றிற்குப் பயன்படுவது. மிகப் பழையது, மிகப்பரவலான உயர்நிலை மொழிகளில் ஒன்று. வணிகத்துறை, தொழில்துறை ஆகியவற்றிலும் பயன்படுவது. இம்மொழி தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. Formula translator வாய்பாடு பெயர்ப்பி.

frames - சட்டங்கள் : வேறுபட்ட பகுதிகளாகத் திரை பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளே திரைகள். சட்டத்தொகுதி ஒட்டுகளைக் கொண்டு, இவற்றை உருவாக்கலாம். அளவைக் குறிக்க இத்தொகுதி ஒட்டுடன் இரு பண்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பத்திகளும் வரிசைகளும் ஆகும். இவற்றின் மதிப்புகள் குறும் படங்களாகவோ விழுக்காடுகளாகவோ கொடுக்கப்படும்.

framing - Units of data marking the boundary of fields or characters for data transmission. வரையறைப்படுத்தல் : தகவல் செலுத்துகைக்காக உருக்கள் அல்லது புல எல்லையைக் குறித்தல்.

Frankston, Bob - பாப் பிராங்ஸ்டன் : காட்சிக் கணிப்பானை ஆப்பிளுக்காக 1979 இல் அமைத்தவர். பா. Bricklin

Freddy Williams Prof - பேரா. பிரடி வில்லியம்ஸ் : பேரா. கில்பர்னின் ஆசான், முதல் கணிப்பொறியை நிறுவியவர்.

free field - A property of information retrieval device permitting recording of information