பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acc

11

act

துல்லியம் : நுட்பம்,அளக்கப்பட்ட மதிப்பு கிட்டத்தட்ட உண்மைத் தன்மையை பெற்றிருத்தல்.

accurating control character - A character showing if any data is incorrect for manipulation.
துல்லியக் கட்டுப்பாட்டு உரு : கையாள்வதற்கு ஒரு தகவல் தவறானதா என்பதைக்காட்டும் உரு.

acknowledge, ACK - A control signal checking if transmitted data has been accepted by the receiver.
ஒப்புகை : ஒரு கட்டுப்பாட்டுக் குறிகை செலுத்தப்பட்ட தகவல். பெறுங்கருவியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதைச் சரிபார்ப்பது.

acoustic compiler - A device in a modem allowing a telephone to transmit digital data over an ordinary telephone line.
ஒலி இணைப்பி : இருதிலைச் செயலியில் உள்ளது. பொதுவாக உள்ள தொலைபேசிக் கம்பி வழியாக இலக்கத்தகவலைச் செல்லச் செய்யுமாறு தொலைபேசியை அனுமதிப்பது.

active element - The part of the computer, carrying operations.
வினையுறுகூறு : செயல்களைச் செய்யும் கணிப்பொறியின் பகுதி.

active master file - The computer master file as determined by usage data.
வினையுறு முதன்மைக் கோப்பு : வழக்காற்றுத் தகவலினால் உறுதிசெய்யப்படும் கணிப்பொறியின் முதன்மைக் கோப்பு.

Active Server Pages -
வினையுறு பயனாளிப் பக்கங்கள், விபப.

activity level - The value assumed by a structural variable during solving a problem.
செயற்பாட்டு மட்டம் : ஒரு சிக்கலைத் தீர்க்கும் பொழுது, ஓர் அமைப்பு மாறித், தான் கொள்ளும் மதிப்பு.

activity ratio - The ratio between the number of records moved in an updating file and the total number of records in that file.
செயற்பாட்டு வீதம் : உயர்த்த வேண்டி, ஒரு கோப்பில் செலுத்தப்படும் பதிவகங்களின் எண்ணிக்கைக்கும் அக்கோப்பிலுள்ள மொத்த பதிவகங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள தகவு.

actuator - Any device under a signal control to do a mechanical action.
வினையாற்றி : ஒர் எந்திரச்செயலைக் கட்டுபாட்டுக்குறிகை வழிச் செல்லுமாறு செய்யும் கருவியமைப்பு.