பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

glo

110

gra

றீடு செய்தலும் : சொல் முறையாக்கு முறையின் பாடப் பதிப்புப் பணி. இதில்,கொடுக்கப்பட்ட உருக்களின் கூடுகைக்குரிய பாடம் தேடப்படும். இத்தகைய கூடுகை மற்றொரு உருக்கள் தொகுதியால் மாற்றீடு செய்யப்படும்.

global variable - A variable referred to throughout a main program. முழுமாறி : முதன்மை நிகழ்நிரல் முழுவதும் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மாறிலி.

Gnutella - நூட்டில்லா : வலையமைவுப் பணியகங்களில் ஒன்று. ஒரு பயனுள்ள தகவல் தொடர்பு மாதிரி. நல்ல எதிர்கால வாய்ப்புள்ளது.

Gopher - காப்பர் : ஆவணங்களை இணைக்கும் பழைய முறை. எச்டிஎம்எல் இதை மாற்றீடு செய்துள்ளது.

GO TO, GO TO - A branching instruction used in high level programming languages. கோட்டு : செல்க. கிளைக்கட்டளை. உயர்நிலை நிகழ்நிரல் மொழிகளில் பயன்படுவது.

Govindsamy N. Prof. - பேரா. நா. கோவிந்தசாமி : இவர் மறைந்த மாணிக்கம். சிங்கப்பூரைச் சார்ந்தவர். தமிழ் இணைய முன்னோடி. இவர் தொடங்கிய கணியன் தமிழ்ச் செய்தி (1977) நிற்கும் வரை வெற்றியுடன் நடைபெற்றது. நாள்தோறும் 600 பேர் பயன்படுத்தினர். தமிழ் இணைய 99 திறவு பலகைக்குரிய (தமிழக அரசு) உட்பலன் இவர் அமைத்த கணியன் திறவு பலகையிலிருந்து பெறப்பட்டது. தமிழ் இணைய உலகம் இவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. இவர்தம் அரிய பணி கணியன் குடும்ப மின் இதழ்கள் தோன்ற வழி வகுத்தது.

graceful degradation - சீரானபடி இறக்கம் : கணிப்பொறி எந்திரம் பழுதுபடல். பழுது ஒரு சில பகுதிகளில் மட்டும் இருப்பதால், முழுப்பழுது ஏற்படுவதற்கில்லை.

graphical visual display device - A computer input-output device. It enables the user to manipulate graphic material in a visible two-way real time communication. It has a light pen, keyboard and a visual display unit monitored by a controller; otherwise known as graphoscope. வரைகலை காட்சி வெளிப்பாட்டுக் கருவியமைப்பு : கணிப்பொறி உட்பலன் வெளிப்பலன் கருவியமைப்பு. இருவழி மெய்ந்நேரப் பார்வைச் செய்தித் தொடர்புக்குரிய வரைகலை பொருள்களைக் கையாளப் பயனாளிக்கு உதவுவது. இதில், ஒளிஎழுதி, விசைப் பலகை,