பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

graphics set - The group of graphics symbols provided by the manufacturer of a microcomputer. It is usually marked on a group of keys. வரைகலைத்தொகுதி: வரை கலைக் குறியீடுகள் தொகுதி. நுண்கணிப்பொறி உற்பத்தியாளரால் வழங்கப்படுவது. இது வழக்கமாகத் திறவுத் தொகுதியில் குறிக்கப்படுவது.

graphics tablet - The popular type of digitizing device using a flat tablet and a stylus for graphic input. This device offers an efficient method of converting object shapes into computer storable information.

graphics terminal - A terminal with a screen adapted for displaying high resolution graphics. வரைகலை முனையம் : உயர் பகுப்பு வரைகலையைக் காட்டுமாறு அமைந்துள்ள திரையுடன் கூடிய முனையம்.

Grosh's law - This law states that the processing power of a computer is proportional to the square of its cost. கிராஷ் விதி : ஒரு கணிப் பொறியின் முறையாக்கு திறன் அதன் ஆக்க விலை இரு படிக்கு நேர்வீதத்தில் உள்ளது என்பது இவ்விதி.

group code - A systematic error checking code. Used to check the validity of a group of characters transferred between two terminals. குழுக்குறியீடு : முறையான பிழை சரிபார்க்கும் குறியீடு. இரு முனையங்களுக்கிடையே மாற்றப்படும் உருக்கள் தொகுதியின் செல்லுபடி திறனைச் சரிபார்க்கப் பயன்படுவது.

grouping of records - Placing of records together in a group to either conserve storage space or reduce access time. ஆவணங்களைத் தொகுதி யாக்கல் : ஒரு தொகுதியில் ஆவணங்களை ஒருங்குசேர வைத்தல், சேமிப்பு இடத்தைப் பாதுகாக்கவும் அல்லது அணுக்க நேரத்தைக் குறைக் கவும் இது நடைபெறுவது.

groupings, standard set of - திட்டத் தொகுதிகள்: இவை பின்வருமாறு 1) கோப்பு, 2) பதிப்பி, 3) காட்சி, 4) படிவமைப்பு, 5) கருவி, 6) சாளரம், 7) உதவி,

group mark - A special character used to indicate the end of a group of characters in store. தொகுதிக் குறி : சேமிப்பி லுள்ள உருக்கள் தொகுதியின் முடிவைக் குறிக்கப் பயன்படும் தனிஉரு.