பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

head - A small electro - magnetic device able to read, record and erase data on a magnetic storage medium, Eg. a disk. Otherwise known as read / write head. தலை : ஒரு சிறு மின்னணுக் காந்தக்கருவி, காந்தச் சேமிப்பு ஊடகத்திலுள்ள தகவலை எழுத, படிக்க, பதிய, அழிக்க உதவுவது. எ-டு வட்டு, வேறு பெயர் படி / எழுது தலை.

header - The area at the top of a page. It can be created as we desire. தலைக் குறிப்பு : ஒரு பக்கத்தின் மேலுள்ள பகுதி. நாம் வேண்டியவாறு இதை உரு வாக்கலாம். ஒ. footer.

heading tag -தலைப்பொட்டு: ஒட்டுகளில் ஒருவகை. இது எச்டிஎல் ஆவணத்தைக் கவர்ச்சியுள்ளதாக்கும்.

help - assistance;உதவி.

hesitation - A short automatic suspension of a main programme to carry out all or part of another operation. Eg. fast transfer of data from a peripheral unit. தயக்கம் : ஒரு செயலைப் பகுதியாகவோ முழுதுமாகவோ நிறைவேற்றும் ஒருமுதன்மை நிகழ்நிரல். குறுகிய நேரம் தானாக நிற்றல் எ-டு. வெளிப்புற அலகிலிருந்து விரைவாகத் தகவலை மாற்றல்.

hexadecimal numbers - அறுபதின்ம எண்கள் : உயர் மதிப்புள்ள இரும எண்களை மீக நீண்ட இரும வரிசையாய்க் குறிக்கலாம். இதைத் தவிர்க்க அறுபதின்ம எண் பயன்படுகிறது. இம்முறையில் 16 எண் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன : 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F இதில் A, B, C, D, E, F என்னும் எழுத்துகள் 10, 11, 12, 13, 14,15 என்னும் மதிப்புகளை முறையே பெறுகின்றன. அறுபதின்ம முறையின் அடி எண்மதிப்பு 16 ஆகும் இந்த எண்களின் இட மதிப்பு வலமிருந்து இடம் 16இன் இரு மடங்காகும். இரும எண் வரிசையின் ஒவ்வொரு 4 இருமிகளும் ஓர் அறுபதின்ம எண்ணைக் குறிக்கும். காட்டாக, 01101011 என்னும் இரும எண்ணை எடுத்துக்கொள்க. இதைக் கீழ்க்கண்டவாறு நன்னான்கு இருமிகளாகப் பிரித்து எழுதலாம். பின் ஒவ்வொரு 4 இருமிகளையும் சமமான அறு பதின்ம எண்களாக எழுதுக.

0110 ....> 6B

இவ்வாறு இரும எண்களை அறுபதின்ம எண்களாக எளிதாக மாற்றி எழுதலாம். இதே போல் ஓர் அறுபதின்ம எண்ணை இரும எண்களாகவும் எளிதில் மாற்றலாம். எ.டு. 3E1 . . . > 0011 1110 0001 ...> 1111100001.