பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதின்ம எண்களின் அறு பதின்ம எண்களாக மாற்ற, இரும எண் மாற்றத்திற்கு 2 ஆல் வகுத்தது போல, இங்கு 16 ஆல் வகுத்து அறுபதின்ம எண்ணைப் பெறலாம். எடுத் துக்காட்டு பின்வருமாறு :

69172 என்னும் பதின்ம எண்ணை அறுபதின்ம எண்ணாக மாற்றல்.

ஆகவே (6972)10 = (10E34)16

hidden line - A graphic display of a three dimensional object in line form. மறைவரி : வரிவடித்தல் முப் பரும வரைகலைக் காட்சி.

hierarchial data base -படிநிலைத் தகவல் தளம்: இது முதன்மையாக முதன்மைக் கணிப்பொறிகளில் பயன்பட்டது. இதில் பதிவுருக்கள் மரம் போல் இருக்குமாறு வகைப்படுத்தி அடுக்கப்படும். பதிவுரு வகைகளுக்கிடையே உள்ள தொடர்பு தாய் சேய் தொடர்பு போன்றது.

hierarchial file - A file with a grandfather - father - son structure. படிநிலை வரிசைக் கோப்பு :தாத்தா தந்தை மகன் என்னும் படிமரபுள்ள கோப்பு.

high level languages - உயர்நிலை மொழிகள் : பயன் பாட்டு நிகழ்நிரல்களைச் செயற்படுத்த இவை உருவாக்கப்பட்டுள்ளன. மொழி யமைப்பைப் பயன்படுத்திப் புரியக்கூடிய குறிமுறைகளைப் பயனாளி அறிந்து கொள்ளலாம். இவற்றைச் செயற்படுத்த, இவை எந்திர மொழியாக்கப் பட வேண்டும். இதற்குத் தொகுப்பியைப் பயன்படுத்த வேண்டும். பொதுவான உயர் நிலை மொழிகளாவன :1) பேசிக் 2) கோபல் 3) போர்ட்டன் 4) விஷூவல் பாக்ஸ்புரோ 5) விஷூவல் பேசிக், விபி 6) ஜாவா 7) விஷூவல் C++.

high speed printer, HSP - A printer printing 600 lines per minute. உயர் விரைவு அச்சியற்றி, எச்எஸ்பி : ஒரு நிமிடத்திற்கு 600 வரிகள் அச்சியற்றும் கருவி.

high speed reader - The fastest input device existing at a particular time. உயர்விரைவு படிகருவி : குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு உட்பலனைக் கொடுக்கும் கருவி.

high resolution graphics - Images displayed on a VDU showing fine detail.