பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

HTML

121

HTML


HTML tags - எச்டிஎம்எல் ஒட்டுகள் : இம்மொழியைப் பயன்படுத்தி நம் ஆவணத்தை எவ்வாறு திரையில் காட்ட லாம் என்பதை மேய்விக்கு அறிவுறுத்தலாம். இந்த அறிவுறுத்தல்கள் அல்லது குறிகளே ஒட்டுகள் எனப்படும். நம் ஆவணத்தின் உள்ளடக்கங்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய, இந்த ஒட்டுகளை மேய்வி பயன்படுத்தும். இந்த ஒட்டுகளில் ஒரு திறவுச் சொல் இருக்கும். இச்சொல் கோண அடைப்புகளைக் (<>) கொண்டிருக்கும். இச்சொல்லே ஒட்டின் வேலையைச் சுட்டிக்காட்டும். எ-டு.

<Head> - தலை

<Title> - தலைப்பு

<HTML> - எச்டிஎம்எல்

பொதுவாக, இந்த ஒட்டுகள் வேற்றுமைப் பொருள் உடையவை அல்ல. <HEAD>, <Head>, <hEAd>, <head> என்பதெல்லாம் ஒன்றே. பெரும்பான்மை ஒட்டுகள் இணையாக இருக்கும் முதல் ஒட்டு. Start tag - தொடங்கு ஒட்டு இது ஒரு பயன் தொடங்குவதைக் குறிக்கும். இரண்டாவது ஒட்டு End tag - முடிவு ஒட்டு. ஒரு பயன் முடிவதைக் குறிக்கும். இவ்விரு வகை ஒட்டுகளும் ஒன்றே.

HTML tags, kinds of - எச்டிஎம்எல் ஒட்டு வகைகள் : இவை பின் வருமாறு 1) Start tag - தொடங்கு ஒட்டு 2) End tag - முடிவு ஒட்டு 3) Nested tags - கூடுகை ஒட்டுகள் : தலைப்பு ஒட்டு தலை ஒட்டோடு சேரும். இத்தலை ஒட்டு மீண்டும் எச்டிஎம்எல் ஒட்டோடு கூடும். இதேபோல உடல் ஒட்டு எச்டிஎம்எல் ஒட்டோடு சேரும். இவ்வகை ஒட்டுகளே கூடுகை ஒட்டுகள் ஆகும். எச்டிஎம்எல் ஆவணங்களை எழுதும் பொழுது இந்த ஒட்டுகள் அடிக்கடி பயன்படும். ஒட்டுகளைச் சேர்க்கும் பொழுது, புற ஒட்டோடு உள் ஒட்டு முழுதுமாகச் சேர்ந்திருக்க வேண்டும். ஒட்டுக்கு முன்பும் பின்பும் தவறாது கோணக்குறி இட வேண்டும். (<>). 4) Bold tag - பெரிய எழுத்து ஒட்டு. 5) Italics tag - சாய்வெழுத்து ஒட்டு. 6) Underline tag - கீழ்க்கோடிடல் ஒட்டு. 7) Centre tag - மைய ஒட்டு. அதாவது பாடத்தை 4 லிருந்து 5 வரை உள்ள எழுத்துகளால் காட்டவேண்டும். இவை எல்லாம் இணை இணையாகவே பயன்படும்.