பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ini

130

input

பொறியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நடைமுறைச் செயல்கள் நிகழ்நிரலைச் சுமை யேற்றப் பயன்படுவது.

initialization - A process carried out at the beginning of a programme by suitable means.

தொடங்கல் : தகுந்த வழி வகைகளால் ஒரு நிகழ்நிரலில் தொடக்கத்தில் நிறைவேற்றப் படும் செயல்.

inkjet printer - A printer using a technique of projecting droplets of ink at paper to form the required image.

மைப்பீச்சு இயற்றி : வேண்டிய உருவை உருவாக்கத் தாளில் மைத்துளிகளைத் தெளிக்கும் நுட்பத்தைக் கொண்ட அச்சியற்றி. ஒ. Laser Printer.

inkjet printer, technique of - மைப்பீச்சு அச்சியற்றியின் நுட்பம் : இதன் அச்சுத் தலையில் பல துளைகள் இருக்கும். ஒருங்கினை தடையளிப்பி விரைவாக வெப்பப்படுத்தப்படும். இது வெப்பம் அடையும்பொழுது, அதற்கருகிலுள்ள மை ஆவியாகித் துளைவழியாக வெளிவரும்; தலைக்கு அருகிலுள்ள தாளில் புள்ளியை உண்டாக்கும்.

ஓர் உயர்பகுப்புத்திறனுள்ள மைப்பிச்சு அச்சியற்றியில் 50 துளைகள் இருக்கும். ஓர் அங்குலத்திற்கு 300 புள்ளிகளை அச்சியற்றுபவை பன்மத் தலைகளைக் கொண்டவை. ஒரு தலை ஒரு நிறத்திற்கு. இதனால் வண்ண அச்சிடல் எளிதாகும். அச்சியற்றும் விரைவு ஒரு வினாடிக்கு 120 உருக்கள்.

input - information fed into a computer

உட்பலன் : உட்பாடு. கணிப்பொறியினுள் செலுத்தும் செய்தி. ஒ. output.

input box - உட்பலன் பெட்டி : இது பயனாளியிடமிருந்து கட்டளையைப் பெறப் பயன்படுவது.

input box function - உட்பலன் பெட்டிச் சார்பலன் : இப்பெட்டியிலிருந்து பெறப்படும் விளைவு. இதற்கு இப்பெட்டி உதவுகிறது.

input device - The device sending data into a computer Eg. mouse.

உட்பலன் கருவியமைப்பு : கணிப்பொறிக்குள் தகவலைச் செலுத்தும் கருவியமைப்பு. எ-டு சுட்டெலி. ஒ. output device.

input devices - உட்பலன் கருவியமைப்புகள் : இவை பின்வருமாறு விசைப்பலகை, சுட்டெலி, கட்டுப்பாட்டுக் கோல்.

input tag - உட்பலன் ஒட்டு : இதன் இயல்புகள் : வகை, பெயர், அளவு, மதிப்பு.