பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intel

132

inter

சுற்று. இதில் படிகப் பெருக்கிகள், தடையளிப்பிகள், இரு முனை வாய்கள், மின்ஏற்பிகள் ஆகியவை எல்லாம் சேர்ந்து ஒரு சிறிய தனித்துள்ள சிலிகன் நறுவலில் அமைந்திருக்கும். இச்சுற்று வந்த பின்னரே கணிப்பொறி விரைந்து வளரலாயிற்று. இந்த ஒருங்கிணை சுற்று நறுவல் 1964 இல் புனையப் பெற்றது.

Intel - இண்டல் : அமெரிக்க நிறுவனம் நுண்முறையாக்கிகள் உருவாக்குபவர்கள். இதன் மூளை ஆண்ட்ரூ குரோவ், எ-டு இண்டல் 8080, 8086, 8088. பா. Grove.

Intel E-Business Forum - இன்டல் மின்வணிக அரங்கம் : மும்பையில் செயல்படுவது, இட்டியத்தை உருவாக்கியுள்ளது. இணைய வளர்ச்சியில் அதிகம் நாட்டம் செலுத்திவருவது.

Intelligent Chip - நுண்ணறிவு நறுவல் : மீயுணர்வுள்ள நறுவல் வகை. செயற்கை நுண்ணறிவைச் சார்ந்தது. நிறைவிலாக் காசோலைகளைப் படிக்கப் பயன்படுவது.

interactive programme - இடைவினை நிகழ்நிரல் : வேறு பெயர் பயனாளி நட்பு நிகழ்நிரல். இதில் பயனாளிகளுக்கும் எந்திரமிடத்திற்கிடையே துலங்கல் தகவல் தொடர்புகள் உடனுக்குடன் கையாளப்படும்.

interface - A circuit or device connecting a peripheral device to a computer in order to enable the transfer of data between the two. இடைமுகம் : இது ஒரு மின்சுற்று அல்லது கருவியமைப்பு. கணிப்பொறியோடு வெளிப்புறக்கருவியமைப்பை இணைப்பது. இதனால் இவ்விரு கருவியமைப்புகளுக்கிடையே தகவல் மாறுகை நடைபெறும்.

interface standards - இடைமுகத்திட்ட அமைப்புகள் : மையச்செயலகம், நினைவகம் ஆகிய இரண்டினோடு திட்டப்படுத்திய வகையில் பல உட்பலன் / வெளிப்பலன் கருவியமைப்புகள் இணைக்கப்படுகின்றன. இவையே இடைமுகத் திட்ட அமைப்புகள். எ-டு ஆர்எஸ் 232C

interlace - இடைப்பின்னல் : சேமிப்பு நாடாவில் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்தடுத்து நினைவக இட எண் வழங்கல். அணுக்க நேரத்தைக் குறைக்க இது செய்யப்படுகிறது.

inter leaving - இடைவிடல் : இது ஒரு நுணுக்கம். பன்ம நிகழ்நிரலாக்கலில் பயன்படுவது. இதில் ஒரு நிகழ்நிரலின் துண்டுகள் மற்றொரு நிகழ்நிரலில் செருகப்படும். ஒரேசமயம் இரு நிகழ்நிரல்களையும் நன்