பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inter

136

ISDN


மின்னஞ்சல்களை அனுப்பப் பெற. 4) அணுக்கத் தொலைபேசி எண்கள்: இவை இணைப்பி வழங்குபவரிடம் தொடர்பு கொள்ளப்பயன்படும்.

interpreter - மொழிபெயர்ப்பி : இது ஒரு மொழிபெயர்ப்பு அமைவு நிகழ்நிரல்; உயர் மொழி நிகழ்நிரலை எந்திர மொழி நிகழ்நிரலாக்குவது. இதில் செயல் விரிவாகவும் விளக்கமாகவும் நடைபெறும்.

interrupt system - The means of interrupting a programme and proceeding with at a later time. குறுக்கீட்டு அமைப்பு : ஒரு நிகழ்நிரலைக் குறுக்கிட்டு நிறுத்திப் பின் நடைபெற விடும் வழிவகை.

intranet - அக இணையம் : இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் துறையை வளர்த்தல். இணையம் உலகளவில் நடைபெறுவது. ஆனால், அகஇணையம் ஒரு நிறுவனத்திற்குள் மட்டுமே நடைபெறுகிறது. இதன் முதன்மை நோக்கம் வேலைகளை ஒழுங்குப்படுத்தி நேரத்தைச் சேமித்துச் செலவுகளைக் குறைத்து ஆதாயத்தை அதிக மாக்கல்.

inversion - The process of creating an inverted file from a file organized in some different way. தலைகீழாதல் : சிறிது வேறுபட்ட வழியில் உருவாக்கிய கோப்பிலிருந்து ஒரு தலைகீழான கோப்பை உருவாக்கும் முறை.

inverter - A logic element with one binary input digit signal to carry out the logical function of negation. தலைகீழாக்கி : ஒருமுறை மைக்கூறு, ஓர் இரும உட்பலன் குறிகையைக் கொண்டது. இல்லை எனும் முறைமைச் செயலைச் செய்வது.

invigilator - A device checking the performance of a control unit. மேலாளி : ஒரு கட்டுப்பாட்டு அலகின் செயல்திறனைச் சரிபார்க்கும் கருவியமைப்பு.

invisible failure - A failure of either software or hardware. It does not have any noticeable effect on the operating system. காணாப்பிழை : மென்பொருள் அல்லது வன்பொருள் பிழை, இயங்குதொகுதியில் இது பார்க்கத்தக்க விளைவை உண்டாக்காது.

ISDN, International Services Digital Network - அனைத்துலக இலக்கப் பணி இணையம், அஇபஇ : இது மிக முன்னேறிய தொலைத் தொடர்பு வலையமைவு. உயர்விரைவும் செலவு நன்மையுள்ள வலை