பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ker

196

key


பெர்ட் கீலி புகைப்படத்துடன்

kernel - 1) A set of procedures controlling the real resources in a virtual machine. 2) A message handling facility of a control system. தகவல் கரு : 1) ஒரு மாய எந்திரத்தில் மெய்யான மூலங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைத் தொகுதி 2) ஒரு கட்டுப்பாட்டுத் தொகுதியின் செய்தியைக் கையாளும் வசதி.

key - 1) The common field within a record utilized in identifying an item. 2) An individual button of a keyboard used to generate a code to represent a character. திறவு : 1) ஓர் ஆவணத்திலுள்ள பொதுப்புலம்; ஒரு தகவல் இனத்தை அடையாளமறியப் பயன்படுவது. 2) விசைப்பலகையின் தனிப் பொத்தான்; ஓர் உருவைக் குறிக்க ஒரு குறிமுறையை இயற்றுவது.

keyboard - விசைப்பலகை: திறவுப்பலகை. ஓர் உட்பலன் கருவியமைப்பு. இதிலுள்ள சொடுக்கிகள் ஒரு குறிமுறையை இயற்றுவது. இக்குறிமுறை தனி உருக்களைக் கொண்டிருக்கும். இவை எழுத்து, இலக்கம், குறி, கட்டளை ஆகியவையாகும்.

keyboard events - விசை திறவுப் பலகை நிகழ்வுகள் : இவை விசைப்பலகை உட் பலனைக் கண்காணிக்குமாறு நிகழ்நிரலுக்கு உதவுபவை. இந்த உட்பலன் நிகழ்நிரலுக்குச்செல்வது. தவிரத் தேவைப் பட்டால் உட்பலனைச் செல்லுபடியாக்குவது மாற்றுவது. இந்நிகழ்வுகளின் முதன்மை நோக்கம் உட்பலனைச் செல்லுபடியாக்கலே. பின்வரும் மூன்று நிகழ்வுகளும் விசைப் பலகையுடன் தொடர்புள்ளவை.

1) திறவழுத்தல் (keypress) : திறவு அழுத்தப்படும் பொழுது உண்டாவது.

2) திறவுகீழ் (keydown) : திறவு அழுத்தப்படும் பொழுது உண்டாவது.

3) திறவுமேல் (keyup) : திறவு விடுபடும் பொழுது உண்டாவது. தொழில் முறையில் உட்பலனைச் சரிபார்ப்பதற்குரிய கட்டுப்பாட்டை இந்நிகழ்வுகள் அளிக்கின்றன.