பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

logo

148

LPS



logo - லோகோ : உயர்நிலைக் கணிப்பொறி மொழி. சேமர் பேப்பர்ட் என்பவரால் புனையப்பட்டது. குழந்தைகள் எளிதில் கணிதம் கற்க உதவுவது.

log off, out - நிறுத்து (கணிப்பொறி).

log on, in - தொடங்கு (கணிப்பொறி).

loop - கட்டளைச் சுற்று : ஒரு நிகழ்நிரலின் கட்டளைத் தொடர். இதில் இறுதிக் கட்டளை ஒரு தாவல். இதனால் தொடர் தொடரும். இது ஒரு மாறி, முன்னமைந்த மதிப்பை அடையும் வரை நடைபெறும்.

Love Bug I - விரும்புபிழை I : இது இதுவரை ஏற்படாத கணிப்பொறிப் பிழை. 11-05-2000 அன்று பிலிப்போ கணிப்பொறி மாணவர் இது ஏற்படக் காரணமாக இருந்தார். இது தற்செயலாக நடந்தது. இந்நச்சுப்பிழை, கணிப்பொறி மின்னஞ்சல் அமைப்புகளை உலகெங்கும் முடங்கச் செய்தது. இம்மாணவர் பெயர் ஒனல் டி கஸ்மன். இவர் இதை எழுதினாரா என்பது இவருக்கே தெரியாது. இச்செயல் கணிப்பொறி உலகில் ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கிற்று.

Love Bug ll - விரும்புபிழை ll : புதிய மின்னஞ்சல் பிழை வேறுபெயர் ஹெர்பி விரும்புபிழை விட அதிக சேதத்தை உண்டாக்குவது குறிப்பாகக் கோப்புகளை துடைத்து எடுத்ததைப்போல் ஆக்கிவிடும்.

ஓனல் டி கஸ்மன்
(படத்தில் முன்னிருப்பவர்)

low level language - தாழ் நிலை மொழி : நுண்முறையாக்கியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மொழி. இதை நாம் புரிந்து கொள்ள இயலாது. எ-டு. கோவை மொழி, எந்திர மொழி. செயல் விரைவு, பயனுறு நினைவகச் சேமிப்பு ஆகிய இரண்டும் இதன் சிறப்பியல்புகள்,

LPM - ஒரு நிமிக்கு இத்தனை வரிகள். lines per minute.

LPS - ஒரு வினாடிக்கு இத்தனை வரிகள். lines per Second.