பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mag

150

mail


அட்டைக் கோப்பின் பகுதியாக உள்ள கருவியமைப்பு. காந்த அட்டைகள் உள்ளன.

magnetic bubble memory, MBM - காந்தக் குமிழி நினை வகம் : இருமத் தகவல்களைச் சேமிக்கும் கருவியமைப்பு. காந்தக் குமிழ்ச் சரம். காந்தப் பொருள் படலத்தில் உள்ளது.

magnetic card file - A direct access storage memory. காந்த அட்டைக் கோப்பு : நேரிடை அணுக்கச் சேமிப்பு நினைவகம்.

magnetic character reader - A character reader reading special type fonts printed in magnetic ink. காந்த உருப்படிப்பி : உருப்படிப்பி, காந்த மையில் அச்சிட்டுள்ள தனி வகை எழுத்துகளைப் படிப்பது.

magnetic disk - A storage device. காந்த வட்டு : ஒரு சேமிப்புக் கருவியமைப்பு.

magnetic disk file - A file of data held on a magnetic disk. காந்த வட்டுக் கோப்பு : காந்த வட்டிலுள்ள தகவல் கோவை.

magnetic drum - A storage device. காந்த உருளை : ஒரு சேமிப்புக் கருவியமைப்பு.

magnetic ink character recognition, MICR - காந்த மை உரு அறிதல், காமைஉஅ : காந்த மை உருக்களைப் பயன்படுத்தி ஆவணத்தில் செய்திகளைப் பதித்தலும் எந்திரம் மூலம் அவற்றை அறிதலும். இம்முறை தகவல்கள் உள் அனுப்பும் நேரத்தை மிச்சப்படுத்தும். கொடுக்கப்படும் தகவல்கள் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வழி செய்கிறது.

magnetic memory - A storage device functioning by the principle of electro magnetism. காந்த நினைவகம் : காந்தக் கருவியமைப்பு மின்காந்த நெறிமுறையில் இயங்குவது.

magnetic tape - காந்த நாடா : இது காந்தப்பொருள் கொண்டது. காந்த முனைப்புள்ளி வடிவத்தில் தகவல் சேமித்து வைக்கப்படும்.

magnetic tape file - A reel of magnetic tape containing records of information. காந்த நாடாக் கோப்பு : ஆவணச் செய்திகளைக் கொண்டுள்ள காந்த நாடாச் சுருள்.

mail box - A device exchanging data between two persons. அஞ்சல் பெட்டி : இருவருக்கிடையே தகவல் பரிமாற்றம்