பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

menu

155

mess


களைக் கொண்டு இதை உருவாக்கலாம். பட்டியலிலுள்ள வேறுப்பட்ட விருப்பங்களைக் குறிப்பிட <விருப்ப> ஒட்டு பயன்படும்.

menu creation, steps in - பட்டி உருவாக்கத்திலுள்ள படிகள் :

1) படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2) பட்டிப் பதிப்பி இயற்றியைப் பெறவேண்டும்.

3) தலைப்புப் பாடப் பெட்டியில் முதல் பட்டிக்குரிய பாடத்தை (கோப்பு) தட்டச்சு செய்ய வேண்டும். பட்டிக்கட்டுப் பாட்டுப் பெட்டியில், பட்டித் தலைப்புப் பாடத்தைக் காட்ட வேண்டும்.

4) பெயர்ப் பாடப் பெட்டியில் பட்டிக்கட்டுப் பாட்டுக்கு வேண்டிய பெயரைக் குறி முறையில் தட்டச்சு செய்ய வேண்டும்.

5) அடுத்தது' என்பதை மற்றொரு பட்டியை உருவாக்கத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

6) பட்டிக் கட்டுப்பாட்டுப் பட்டியல் பெட்டியில் அனைத்து 7 பட்டிகளும் தோன்றும் வரை 1-5 வரையுள்ள படிநிலைகளைத் திருப்பிச் திருப்பிச் செய்யலாம்.

menu, features of - பட்டியின் இயல்புகள் : இவை பின்வரு மாறு.

1) பயன்பாட்டோடு சேர்க்கலாம்.

2) பயன்பாட்டின் பயன்களைப் பயனாளிக்கு வழங்குவது.

3) பயன்பாட்டுக்குக் குறுக்கு வழி அமைப்பது.

4) பிற கட்டுப்பாடுகளைப் போல் இதற்குப் பண்புகளும் நிகழ்வுகளும் உண்டு.

5) கருவிப் பட்டையைக் காட்டி லும் அதிக இயல்புகளை அளிப்பது.

menu, kinds of - பட்டியின் வகைகள் :

1) முதன்மைப் பட்டி : இது சிக்கலான நிகழ்நிரலுக்குரியது.

2) துணைப்பட்டி : எளிமையான நிகழ்நிரல்களுக்குரியது இது.

metropolitan area network, MPAN - பெருநகர்ப்பகுதி வலையமைவு, பொபவ : இது 10 கல் தொலைவிற்கு மேலுள்ளது. இந்த எல்லையிலுள்ள பயனாளிகள் இதைப் பயன்படுத்துவர்.

merge - Joining two sets of data together to make a single larger set. இணைப்பு : தனித்ததும் பெரியதுமான ஒரு தொகுதியை உருவாக்க இரு தொகுதித் தகவல்களை ஒருங்கிணைத்தல்.

message - Any information travelling between a source and destination.