பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Min

157

mode


ஏற்படவில்லை. அறிவார்ந்த முன்னேற்பாடுகளால் தடுக்கப்பட்டது. குறிப்பாகச் செயல் 2000 (ஆக்க்ஷன் 2000) இதனை நீக்கியது. பா. love bug, MTX, YK2.


Minnambalam - மின்னம்பலம் : ஒரு மின் நாளிதழ். ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன். ஒரு நாளிதழுக்குரிய பல பகுதிகளையுங் கொண்டு சென்னையிலிருந்து வருவது. நன்கு நடைபெறுவது.


mini computer - சிறு கணிப்பொறி : நுண் கணிப்பொறியை விடப் பெரியது. விரைவானது, விலை அதிகமானது. இது 16 பிட் கொண்டது.


mini disk - diskette.
நுண்வட்டு : சிறுவட்டு.


minuend - கழிக்கப்படும் எண் : செயலிகளில் ஒன்று. கழித்தலில் பயன்படுவது.


mode - A way of operating a computer. As such it provides special facilities.
செயற்பாங்கு : கணிப்பொறியை இயக்கும் முறை. இது தனி வசதிகளை அளிப்பது.