பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

model

158

modu


model - மாதிரி : ஒன்றின் பகர்ப்பு கணித வடிவத்தில் இருப்பது.

modem - இருபண்பி : modulator - demodulator என்பதன் சுருக்கம். இதன் பொருள் பண்பேற்றி, பண்பிறக்கி, ஆகவே, இருபண்பி எனலாம். இதற்கு வேறு பெயர் நேரடி இணைப்பி என்று பெயர். கணிப்பொறிகளை இணைக்கப் பயன்படுவது. தொலை பேசி வழிகளைப் பயன்படுத்தி, ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல்களை அனுப்ப இது நமக்கு உதவுவது. இது புறப்பண்பி, அகப்பண்பி என இருவகை

modification - மாற்றியமைத்தல் : இது ஒரு நுணுக்கம். இது ஒரு நிகழ்நிரலிலுள்ள முகவரியையும் கட்டளையையும் மாற்றப் பயன்படுவது. இதற்கு அவை தகவல்களாகப் பயன்படுபவை. மற்றும் இதில் எண்கணிதச் செயல்களும் முறைமைச் செயல்களும் பயன்படுகின்றன.

modifier - மாற்றியமைப்பி : ஒரு நிகழ்நிரல் கட்டளையை மாற்றப் பயன்படும் தகவல் இனம்.

modulator - பண்பேற்றி : இது ஒரு கருவியமைப்பு. பண்பேற்ற அடிப்படையில் ஓர் ஊர்தியலையின் மேல் தகவல் குறிகையைப் படியவைப்பது.

module - பொதி : ஒரு முதன்மை நிகழ்நிரலிலுள்ள சார்பலன் தொகுதி.

module key - பொதித்திறவு : கோப்புச் சேமிப்பினுள் பொதிகையில் காணப்படும் பகுதியை அணுகவும் இனங்காணவும் பயன்படும் திறவுகோல்.

module, kinds of - பொதி வகைகள் : இவை பின்வருமாறு

1) வடிவப் பொதிகை (form modue): பயன்பாட்டின் பார்வைப் பகுதிகட்டுப்பாடுக்குரிய பண்பு அமைப்புகளையும் குறிப்புதவிகளையுங் கொண்டது.

2) வகுப்பு பொதி (chess module) : பார்வைக்குப் புலப்படாதது. வடிவப் பொதி போன்றது. பயனாளி இதைக் கொண்டு தனக்கு வேண்டிய பொருள்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

3) திட்ட பொதி (standard module): மாறிலிகள், மாறிகள், செயல்முறைகள் ஆகியவற்றின் பொதியளவு அறுதியீடுகளைக் கொண்டது.

module scope - பொதி எல்லை : தனி அறுதியிடு கற்றையைக் கொண்டு இந்தப் பொதி எல்லையோடு ஒரு மாறிலியை அறுதியிடலாம்.