பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

obj

168

onl


object programme - பொருள் நிகழ்நிரல் : ஒரு நிகழ்நிரல் தொகுப்பியால் எந்திர மொழியாக மாற்றப்படும் பொழுது, அதனால் உண்டாகும் எந்திர மொழிக் கட்டளைகள் பொருள் நிகழ்நிரல் எனப்படும்.


object-oriented data base - பொருள் நோக்கு தகவல் தளம் : இது ஒரு புதிய அமைப்பு. அண்மைக் காலத்தில் அதிக நாட்டம் செலுத்தப்படுவது. ஒரு புது அணுகுமுறை கொண்டது. இதில் பொருள்கள் என்பவை தொகுதித் தகவல்கள், இனங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள இயல்புகள், செயல் முறைகள், பண்பியல்புகள் ஆகும். எடுத்துக்காட்டு : படம், ஒலி, வரைகலை, நிறம், அளவு.


octal digit - எண்மத்தகவல் : எண்ம எனக் குறிமுறையில் உள்ள இலக்கம். எடுத்துக்காட்டு : 0, 1, 2, 3, 4, 5, 6, 7 என்னும் எண்களில் ஒன்று.


octal notation - எண்மக்குறிமானம் : 8 அடி எண்ணாகப் பயன்படும் எண்முறை.


odd parity check - ஒற்றைச் சமச்சரிபார்ப்பு : இரும இலக்கத் தொகுதியால் 1, 0 ஆகியவற்றில் உள்ள சமச் சரிபார்ப்பு.


Office 2000 - ஆபிஸ் (அலுவலகம்) 2000 : மைக்ரோசாப்டின் விளைபொருள். மேடைப் பயன்பாட்டின் இறுதி இடைய (வெப்) அமைப்பைக் குறிப்பது. இணையத்தோடும் தொடர்புள்ளது.


offline operation - மறைமுக இயக்கம் : மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்கும் வெளிப்புறக் கருவியமைப்பு. அச்சியற்றி. ஒ. online operation.


offline unit - மறைமுக வழியலகு : முதன்மைக் கணிப்பொறியுடன் இணையாது இயங்கும் கருவியமைப்பு.


offset - மறுதோன்றி : தேவைப்படும் கட்டுப்பாட்டு முனைக்கும் முறையாக்கு கட்டுப்பாட்டு முறையிலுள்ள முனைக்கும் இடையிலுள்ள நிலையான வேறுபாடு.


omission factor - விடுபடு காரணி : பொருத்தமான மீட்கப்படாத ஆவண எண்ணிக்கையைக் கோப்பிலுள்ள பொருத்தமான ஆவணங்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்து வரும் எண்.


ones complement - ஒன்றின் நிரப்பு : இருமக் குறிமானத்தைப் பொறுத்தவரை ஒன்றின் நிரப்பை மூலத்திலிருந்து (radix) கழிக்க வேண்டும்.


online operation - நேர்முக இயக்கம் : இது கணிப்பொறி இயக்கமாகும். இதில் உட்