பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

page

175

para

செய்யப் பாடத்தை ஒளிர் வாக்க வேண்டும். இதில் ஒரம், பக்கப் பாணி, ஒரங்களை மாற்றல் ஆகியவை அடங்கும்.

page orientation - பக்கம் அமைப்பு : அகலத்தை விட நீளம் ஆவணத்தில் அதிகமிருக் கும். இந்த அமைப்பு ஓவியம் எனப்படும். ஆனால், சில ஆவணங்களில் அகலம் நீளத் தைவிட அதிகமிருக்கும். இந்த அமைப்பு பருமக் காட்சி எனப்படும். மற்றொரு வகைப் படக் காட்சியமைப்பு. அடிக் குறிப்பும் தலைக்குறிப்பும் ஒவ் வொரு பக்கத்திலும் சேர்க்கப் படும்

page printer - பக்கம் அச்சியற்றி: இதில் ஒரு முழுப் பக்கத்திற் குரிய உருக்கோலம் அச்சியற்று வதற்கு முன் அறுதியிடப்படும்.

page reader - பக்கப் படிப்பி

இரு உருப்படிப்பி,

page style dialog box - பக்கப் பாணி உரையாடல் பெட்டி : இது ஓரங்களில் வேண்டிய மாற்றங்களைச் செய்ய உதவும்.

paging - பக்கமிடல் : இது மாயச் சேமிப்பில் ஒருமுறை. இதனால் பக்கங்களுக்கு கருவிச் சேமிப்பு ஒதுக்கப்படு கிறது. இப்பக்கங்களில் தகவல் கள் இருக்கும்.

paint - வண்ணமிடல் : இது பயன்பர்டு. இதில் படம் வரைந்து பின் அது வண்ண மிடப்படும்.

pan - தகட்டுப்படம் : படமுறை யாக்கலில் ஒரு நுணுக்கம். இதில் படம் திரையின் குறுக்கே செல்லும். பெரிய படத்திலிருந்து சில விவரங் களைக் காட்ட இது பயன்படுவது.

paper feed - தாள்விடல் அச்சியற்றி வழியாகத்தாள் இழுக்கப்படும் முறை.

para alignment - பத்தி வரிசை suflang யாக்கம் : இது நான்கு வகை. 1) இடப் பக்க வரிசையாக்கம் 2) வலப்பக்க வரிசையாக்கம் 3) மையப்படுத்தல் 4) நெருக்கிச் செய்தல்.

parallax - இடமாறு தோற்றப் பிழை ஒரு படத்தைப் பார்க்கும் பொழுது அதில் ஏற்படும் தோற்றத் திரிபு.

parallel access - ஒரு போகு அணுக்கம் : தகவல்களைச் சேமிப்புக்கு உள் மாற்றுதலும். வெளி மாற்றுதலும். இதில் எல்லாக் கூறுகளும் ஒரே சமயம் மாற்றப்படும், வேறு பெயர் ஒருபடித்தான அணுக் கம்.

parallel computer - ஒரு போகு, கணிப்பொறி : ஒரு சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மை அல்லது எண்கணிதச்