பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

para

176

pass

செயலைச் செய்யும் கணினி. parallel inter face - ஒரு போகு இடைமுகம் : இதில் ஒருபோகு தகவல் மாற்றம் நடைபெறும்; இம்மாற்றம் வெளிப்புற அலகு களுக்கும் முறையாக்கிக்கும் இடையே நடைபெறும்.

parallel operation - ஒரு போகு செயல் : ஒரே சமயம் பல மாதிரியான செயல்கள் நடை பெறுதல்.

parallel processing - ஒரு போகுமுறையாக்கல் : ஒரு கணிப்பொறியில் ஒரே சமயம் இரு நிகழ்நிரல்கள் ஓடுதல்.

parameter - A variable whose value is set in the main programme and passed along to a sub routine. சுட்டளவு : இது ஒரு மாறி. இதன் மதிப்பு முதன்மை நிகழ்நிரல் அமைக்கப்பட்டுப் பின் துணை நடைமுறைக்குச் செல்லும்.

parity check - சமச் சரி பார்ப்பு

இது ஒரு பிழையறியும் நுணுக்கம். செலுத்தியபின் கணிப்பொறிச் சொற்களின் துல்லியத்தைச் சரிபார்க்கப் பயன்படுவது.

parity check bit - சமச்சரி பார்ப்புப் பிட் : கணிப்பொறி யில் தகவல்களை அளவிடும் பொழுதும் பதியும் பொழுதும் ஒரு தகவலை ஓர் அலகி லிருந்து மற்றொரு அலகுக்குச் செலுத்தும் பொழுதும் பிழை கள் ஏற்படும். ஓர் எண்ணுரு விற்குரிய குறி முறையில் ஏற் படும் ஒரு தனிப் பிழையைக் கூடக் கண்டறியலாம். இதற்குக் குறிமுறையில் கூடுத லான ஒரு பிட்டைச் சேர்க்க வேண்டும். இதுவே இதைச் சரிபார்க்கும் பிட் (இருமி).

parity error - சமப்பிழை சரிபார்ப்பினால் கண்டறியப் படும் தவறான சமத்தினால் ஏற்படும் பிழை.

partition - பிரித்தல் : கணிப்பொறி நினைவகத்தின் ஒதுக்கிய பகுதி. ஒரு தனி

கணிப்பொறி நிகழ்நிரலைச்

செயற்படுத்தப் பயன்படுவது. Pascal - பாஸ்கல் : ஓர் உயர்

நிலைக் கணிப்பொறி மொழி.

கட்டமைப்பு நிகழ்நிரலை உரு வாக்கப் பயன்படுவது. இதைப் புனைந்தவர் ரிக்காலஸ் ஒர்த். ஆனால் 17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கணித அறிஞரும் மெய்யறிவாளருமான பிளய்சி பாஸ்கல் பெயரால் அமைந்தது.

பா. structural programming. password - கடவுச்சொல்: செலுத்துசொல் குறிஉருக் களின் தொகுதி, பொருள் இருக்கத் தேவை இல்லை. கணிப்பொறியை அனுக இதைப் பயன்படுத்த வேண்டும்.

password control - கடவுச்