பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

patch

சொல் கட்டுப்பாடு : மென் பொருள்களுக்குள் செல்லு வதற்குரிய அனுமதிபெறச் செலுத்து சொல் ஒரு பாடப்பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் அடிக்கும் ஒவ் வொரு எழுத்திற்கும் அந்த எழுத்திற்குப் பதிலாக ஒரு விண்மீன் குறிப்பு வரும். நாம் கொடுக்கும் கடவுச்சொல் பிறருக்குத் தெரியக்கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு.

patch - ஒட்டுக்குறி : ஒரு குறி முறையின் பகுதி, ஒரு நிகழ் நிரலைத் திருத்தப் பயன்படுவது.

path - வழி : ஒரு கணிப்பொறி நிகழ்நிரல் கட்டளைகளின் முறைமை வரிசை, pattern recognition - கோலமறிதல் : வடிவம், குறிகை, வரி சை முதியவைகளைக் கணிப் பொறி மூலம் இனங்காண லும் அறிதலும். -

Paulina - பாலினா : தற்காலச் கணிப்பொறி மாயங்களைப் பற்றி நூல் எழுதியவர். இதில் இவர் கணிப்பொறியின் வியப் புகளையும் வேதனைகளையும் குறிக்கின்றார்.

peak load - உச்சிச் சுமை : ஒரு வலையமைவுக்குத் திட்டமிடப் படும் பெருமச் செய்திப் போக்குவரத்து. 

peak volume - உச்சி பருமன் : தன் வேலை நேரத்தில் ஒரு வலையமைவு ஒரே சமயம்

177

per

கையாளும் அழைப்புகளின் எண்ணிக்கை.

pen - தூவல் : கையால் எழுதிய உட்பலனை இயக்கும் கருவி யமைப்பு

performance - செயல்திறன்: ஒரு கணிப்பொறித் தொகுதி யின் திறனளவு. வேறுபட்ட செயல்திற முறைகள் உள்ளன. இத்திறன் மிப் (mip) எனப்படும். ஒரு வினாடிக்கு இத்தனை மில் லியன் கட்டளைகள் என்பதை இது குறிக்கும்.

peripheral devices - வெளிப் புறக் கருவியமைப்புகள் இவை உட்பலன் அலகு, வெளிப்பலன் அலகு. இரண் டாம் நிலைச் சேமிப்புக்குரிய கருவியமைப்புகள் (வட்டு, நாடா) ஆகியவை ஆகும்.

personal computer - தனியாள் கணிப்பொறி : தனிநபர் தன் வீட்டில் பயன்படுத்துவது. இக்கணிப்பொறி வளர்ச்சி இந்தியாவில் 25% அளவே உள்ளது.

personal identification code,

PIC - தனி அடையாளக் குறி. முறை, தஅகு : இது ஆறு உருக்களின் நீளத்தில் உள்ள சிறப்பெண். காந்த நாடாவில் பொருந்தி இருக்கும். இந்நாடா பிளாஸ்டிக் அட்டையில் பதிந்திருக்கும். பயனாளியை இனங்காணப் பயன்படுவது.

pertinency factor - பொருத்து