பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phy

178

ΡLΑΤΟ

திறன் காரணி : மீட்கப்பட்ட உரிய ஆவணங்களின் மொத்த எண்ணிக்கையை அவ்வாறு இல்லாத மொத்த ஆவணங் களால் வகுத்து வரும் எண். இது ஒரு வீதம்.

physical file - மெய்க்கோப்பு: ஓர் இயங்கு தொகுதியில் உள்ள சிறப்பு மெய்ச்சேமிப்பு ஊடகம். இதில் அடங்கியுள்ள கோப்பே மெய்க் கோப்பு.

picture - படம்: உருக்காட்சி யில் தெரியும் தகவல் தொகுப்பு

picture description instruc tions, PDI - படவிளக்கக் கட்டளை, பவிக : கூடுதல் கூறுகளினால் உண்டாகும் படத்தை விளக்கப் பயன்படும் ஒரு வகைக் குறி முறை. வரிகள், கோடுகள், வில்கள் முதலியவை கூறுகள் ஆகும்.

picture element - படக்கூறு : வரைகலைக் காட்சியில் படத் தின் சிறிய கூறு.

picture frequency - பட நிகழ்வெண் தொலைக் காட்சிப் படத்தை உருவாக்கும் வரி எண்ணிக்கையின் முழுத் தொகுதி. அலகு ஹெர்ட்ஸ் (ஒரு வினாடிக்கு இத்தனை சுற்றுகள்) -

pie chart - வட்ட விளக்கப்படம் : வட்ட வட்டமாகத் தக வல்களைத் தெரிவிக்கும் படம்.

pin - ஊசி : நறுவலில் உள்ள சிறுகால்கள். அச்சிட்ட சுற்று

பலகையில் உள்ள இணை துளைகளுக்கு ஒத்தவாறு இருக்கும்.

pin board - ஊசிப்பலகை : செருகு வடிவப் பலகை. இங்கு ஊசிவடிவிலுள்ள நாணற்ற செருகிகளால் இடை இணைப்புகள் அமையும்.

pin feed - ஊசி வழி ஊட்டல் : ஓர் அச்சியற்றியின் ஊசிப் பொறிநுட்பம். இது அச்சிட வேண்டிய தாளைச் செலுத் தும். 

pipelining - தொடர்செலுத்துகை : முன்னுள்ள கட்டளை முழுமையாக நிறைவேறுவ தற்கு முன் ஒரு கணிப் பொறிக் கட்டளையைத் தொடங்கும்.

pixel-picture element - குறும்படம் : படக்கூறு. பா. icon.

Planet | Q 56 - l (பிளானெட்

ஐகுயு 56 (கோள் நுண்ணறிவு) : கல்கத்தாவில் அமைந்துள்ள தும் சிறப்பு வாய்ந்ததுமான பன்ம ஊடக விளையாட்டுத் திடல். சிறந்த தொடக்கநிலைக் கல்வி அளிப்பதற்காக உரிய மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. 12 வயதுள்ள மாணவ மாணவிகள் பயன் பெறுவர். (1999).

PLATO - பிளேட்டோ : கணிப் பொறி வழியமைந்த கல்விமுறை. 1000க்கு மேற்பட்ட முனையங் களைக் கொண்டது. முழுக்க முழுக்கக் கல்வி நோக்குள்ளது.