பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

print

181

pro


நன்கு கையாளுகின்றது.

printout - A hard copy produced by a printer: eg. printed page.
அச்சுப்பாடு : அச்சியற்றி உண்டாக்கும் வன்படி எ-டு அச்சிட்ட பக்கம்.

problem - சிக்கல் : தீர்வு காண வேண்டிய ஒன்று.

procedure - செய்முறை : ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குரிய படிநிலை வரிசை.

process - செயல்முறை : கணிப்பொறி மூலம் தகவலைக் கையாளல்.

processor-செயல்முறையாக்கி : தகவல்களை முறையாக்கும் கருவியமைப்பு. இது மைய முறையாக்கியையும் குறிக்கும்.

product - பெருக்கற்பலன் : இரு காரணிகளைப் பெருக்கி வரும் பலன் : பெருக்கி, பெருக்கப்படும் எண். 4 x 8.

programme - An algorithm expressed in a programming language.'நிகழ்நிரல் : நிகழ்நிரலாக்கும் மொழியில் தெரிவிக்கப்படும் விதிமுறை.

programme editor - A computer routine used in timesharing systems.நிகழ்நிரல் பதிப்பு இயற்றி : நேரப் பகிர்வுத் தொகுதிகளில் பயன்படும் கணிப்பொறி நடைமுறைச் செயல்.

programmable Read Only. Memory, PROM - படிப்பதற்குரிய நிகழ்நிரலாக்கும் நினைவகம், பஉநிதி : படிப்பதற்குரிய நினைவகத்தைப் போன்றது. பயனாளி தான் இதை திகழ்நிரல் செய்ய வேண்டும்.

programmer - நிகழ்நிரலர் : நிகழ்நிரலைக் கணிப்பொறிக்கு உருவாக்குபவர்.

programming language - நிகழ் நிரலாக்கும் மொழி : ஒரு கணிப்பொறிக்கு நிகழ்நிரலர் ஒரு நிகழ்நிரலை எழுதப் பயன்படுத்தும் மொழி.

project - திட்டம் : இது விஷுவல் பேசிக் திட்டம் ஆகும். இது ஓர் அமைப்புப் பெட்டி ஒரு பயன்பாட்டுக்கு வேண்டிய வேறுபட்ட எல்லாப் பகுதிகளையும் கொண்டிருக்கும். திட்டப் படிவங்கள். குறிமைக் கோப்புகள், மூலக் கோப்புகள், சிறப்புக் கட்டுப்பாடுகள், ஆவணக் கோப்புகள் ஆகியவை திட்டத்தில் உண்டு.

project content - திட்டப் பொருள் : ஒவ்வொரு சமயமும் திட்ட சேமிக்கப்படும். விஷுவல் பேசிக், திட்டக் கோப்பை மேம்படுத்தும். திட்டக் கோப்பிலுள்ளவை பின்வருமாறு : திட்ட எக்ஸ்புளோரர், சாளரத்தில் காணப் படும் கோப்புப் பட்டியல்,