பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quit

184

ran


மொழி. பன்ம அணுக்கத் தொகுதியில் பயன்படுவது.

quit - வெளியேறு : ஒரு நிகழ்நிரலின் வேலை. நடைமுறையிலுள்ள செயலை முடிக்கப் பயனாளிக்கு உதவுவது.

R

radio button - வானொலிப் பொத்தான் : இது உரையாடல் பெட்டியில் உள்ளது. இப்பெட்டியில் 3 பொத்தான்கள் இருக்கும். இப்பொத்தான்கள் பன்மத் தெரிவுகளைக் காட்டப்பயன்படுபவை. தெரிவுக்கு இடப்பக்கமுள்ள சிறிய வெண்வட்டத்தை இயக்கி, ஒரு தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம். வட்டத்தின் மையத்தில் தோன்றும் கறுப்புப் புள்ளி, ஒரு தெரிவு தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காண்பிக்கும்.
உருவாக்கல் : இதை உருவாக்க இயல்பு TYPE க்கு RADIO என்னும் மதிப்பைக் கொடுக்க வேண்டும். VALUE என்னும் மதிப்பு இயல்பு, மாறியில் சேமிக்கப்பட்ட மதிப்பைக் குறிப்பிடப் பயன்படும். ஒரு தெரிவைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, இது செய்யப்படும் தெரிவுகளில் ஒன்றைத் தவறுதல் தெரிவாக CHECKED என்னும் இயல்பு பயன்படுத்தப்படவேண்டும். -

radix - மூலம் : வேர். எண் முறையின் அடி எண். இரும முறை மூலம் 2. பதின்ம முறை மூலம் 10, எண்ம முறை 8.

radix complement - மூல நிரப்பு : ஓர் எண்ணின் மூல நிரப்பைப் பின்வருமாறு கணக்கிடலாம். அந்த எண்ணின் மூலத்திலிருந்து ஓர் எண்ணைக் குறைவாகக் கழி. கிடைக்கும் முடிவோடு 1ஐக் கூட்டுக. எ-டு பதின்ம எண் 171 இன் மூல நிரப்பு : 999 - 171 + 1 = 829.

radix notation - மூலக் குறிமானம் : இது ஓர் இன உறுப்பு நிலையான மூலக் குறிமானத்தையும், கலப்பு அடி எண் மூலக் குறிமானத்தையும் தழுவுவது.

random access - வரம்பில் அணுக்கம் : ஒரு சேமிப்பு இடத்தில் தகவலைப் பெறும் முறை. இங்குத் தகவலை வரிசை முறையில் தேடும் பொழுது, அணுக்கம் வரம்புக்கு உட்படுத்தப்படுவதில்லை.

random access disk file - வரம்பில் அணுக்க வட்டுக் கோப்பு : ஒரு தடத்திற்கு ஒரு தலையுள்ள வட்டைக் கொண்டுள்ள கோப்பு. இங்கு ஆவணங்கள் அடுத்தடுத்துச் சேமிக்கப்பட வேண்டியதேவை இல்லை.