பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ran

185

rows


random access memory, RAM - அணுக்க நினைவகம், வஅநி : இது ஓர் அரைக் கடத்திக் கருவியமைப்பு. ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங்கிணை சுற்றுகளைக் கொண்டது. கணிப்பொறித் தொகுதியில் தற்காலிகமாகத் தகவலைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எல்லா நுண்முறையாக்கிகளும் இந்நினைவகத்தைப் பயன்படுத்தித் தகவல்களையும் நிகழ்நிரல்களையும் சேமித்து வைக்கின்றன. தகவல் பைட் அலகில் சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு பைட் = 8 பிட் சொற்கள். இந்நினைவகத்தின் தேக்கு திறன் பைட்டுகளில் அளக்கப்படும். எ.டு. 48K இதில் சேமித்த தகவல்களை வேண்டியவாறு பயன்படுத்தலாம். மின்னாற்றல் இருக்கும் வரையில்தான் இதில் தகவல் இருக்கும். இதைத் தவிர்க்கத் தகவலைச் சேமிக்க வேண்டும்; சேமிக்கப்படும். இது உடனுக்குடனும் நேராகவும் மையச் செயலகத்தை அடையும். ஒ. read only memory.

random access programming - வரம்பில் அணுக்க நிகழ் நிரலாக்கம் : நிகழ்நிரலில் சேமிப்பு நிலைக்குரிய அணுக்கத்திற்கான நேரத்தைக் கருதாதது நடைபெறுவது.

random access storage - வரம்பில் அணுக்கச் சேமிப்பு : இனங்காண வேண்டிய இடத்திற்கு நிலையான அணுக்க நேரத்தை அளிக்கும் சேமிப்பு.

range - வீச்சு : ஒரு வேலைத் தாளில் இது தொடர் நுண்ணறைத் தொகுதியைக் கொண்டது. வீச்சு முகவரியினால் இது குறிப்பிடப்படுவது. iச்சில் முதல் நுண்ணறையின் முகவரி வீச்சு முகவரியாகும். இதை அரைப்புள்ளி தொடரும்; இதற்குப்பின் வீச்சிலுள்ள இறுதி நுண்ணறையின் முகவரி தொடரும். எ.டு. நுண்ணறைகள் G1, G2, G3, G4, G5. இவற்றைச் சுருக்கமாக G1:G5 எனலாம். துண்ணறைகள் A1, B1, C1, D1, E1, F1. இவற்றை A1:F1 எனலாம். நுண்ணறைகள் A4, A5, A6, B4, B5, B6. இவற்றை A4:B6 எனலாம்.

rapid storage - விரைவுச் சேமிப்பு : உயர் விரைவுச் சேமிப்பு.

raster - வரிக்கோலம் : எதிர்மின் வாய்க்கதிர்க் குழாயின் திரையில் பார்க்கும் கிடைமட்ட வரிகளின் கோலம். இவ்வரிகள் ஒரு மின்னணுக் கற்றையால் அலகிடப்படும்.

rows and columns - வரிசைகளும் பத்திகளும் : இவற்றைத் தொடக்கத்திலோ அட்டவணையின் நடுவிலோ சேர்க்கலாம், நீக்கலாம்.