பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rows

186

real


rows and columns height - வரிசைகள் மற்றும் பத்திகளின் உயரம் : இவ்விரண்டையும் எளிதாக வேண்டிய அளவுக்கு மாற்றியமைக்கலாம். அதாவது, கூட்டலாம், குறைக்கலாம்.

raw data - கச்சாத் தகவல்கள் : இவை முறையாக்கப்படுவதற்கு முன்னுள்ளவை. எந்திரம் அறிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு வடிவத்தில் இருக்க வேண்டிய தேவை இல்லை.

read - படி : ஒரு கருவியிலிருந்து தவலைப் பெற்று, அதை முறையாக்கலுக்கு ஆயத்தம் செய்தல்.

reader - படிப்பி : இது ஒரு கருவியமைப்பு. தகவலை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றுவது. எ-டு துளையிட்ட தாள் நாடாவிலிருந்து காந்த நாடாவிற்கு மாற்றுதல்.

read error - படிப்புப் பிழை : இது கணிப்பொறி எந்திர நிலை. இதில் சேமிப்புக் கருவியமைப்பின் அடக்கங்களை மின்னணு முறையில் இனங் காண முடியாது.

read only memory, ROM - படிப்பதற்குரிய நினைவகம், பஉநி : நிலையாகச் சேமித்து வைத்த தகவல்களிலிருந்து உருவாக்கப்படுவது. மின்சாரம் நின்றாலும் இது அழியாது. ஒ. random access memory.

read out - படித்து மாற்று : ஒரு கணிப்பொறியின் உள் சேமிப்பிலிருந்து படித்து அதைப்புறச் சேமிக்குக் கொண்டுவருதல்.

read rate - படிப்பு வீதம் : தகவல் அலகுத் தொகுதி, எ-டு உருக்கள், சொற்கள். கொடுக்கப்பட்ட அலகு நேரத்தில் உட்பலன் படிப்புக் கருவியமைப்பு மூலம் இவ்வலகுகளைப் படித்தல்.

read time - படிக்கும் நேரம் : சேமிப்பிலிருந்து மாறுகை தொடங்குவதற்கும். அது முடிவதற்கும் இடையே உள்ள நேர இடைவெளி. இது அணுக்க நேரத்திற்குச் சமம். இதில் காத் திருக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.

real address - மெய்முகவரி : முதன்மைச் சேமிப்பிலுள்ள இனவரி.

real file - மெய்க்கோப்பு : ஆதி கோப்புகளிலிருந்து உருவாக்கப்படும் ஆவணத்திரட்டு. ஓர் இயங்கு தொகுதியிலுள்ள ஆவண அனுக்கப் பொறி நுட்பத்தைக் கொண்டு இதைச் செய்யலாம்.

real time - மெய்ந்நேரம் : கருவி நிகழ்வோடு ஒரே சமயத்தில் நடைபெறும் முறையாக்கல். தாமதமில்லாமல் அந்நிகழ்வைக் கட்டுப்படுத்த இம்முறை யாக்கல் நடைபெறுவது.