பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reg

188

rel


மாறு செய்தல். மங்கல், அலைக்கழிப்பு ஆகியவற்றி லிருந்து தடுக்க இதைச் செய்ய வேண்டும்.

register - பதிவகம் ; வருங்காலப் பயனுக்குரிய தகவல்களும் குறிப்புகளும் இதில் சேமித்து வைக்கப்படும். இது தற்காலச் சேமிப்புப் பகுதி. இதைச் செய்வது நுண்முறையாக்கி, நேரடியாக இதை இனங் காணலாம்.

register capacity - பதிவகத் திறன் : ஒரு பதிவகத்தில் முறையாக்கப்படும் எண்களின் மேல் கீழ் வரம்புகள்.

register circuit - பதிவகச் சுற்று : நினைவகக் கூறுகளுடன் கொண்ட சொடுக்கும் சுற்று இது குறிமையுள்ள மில்லியன் கனக்கான இருமிகளை (பிட்டுகள்) இது சேமிக்க வல்லது. registry - பதிகோப்பு : @5, தகவலைப் பதியும் கோப்பு. கணிப்பொறித் தொகுதியில் எல்லா வன்பொருள் மென்பொருள் விவரங்களைச் சேமித்து வைப்பது.

regression analysis - தொடர் பகுப்பு : புள்ளி இயல் பகுப்பில் மாற்ற வீதத்தை உறுதி செய்யும் வழி.

relational data base - தொடர்புத் தகவல் தளம் : தகவல் தளங்களில் ஒருவகை. ஒரு தொடர்பு அமைப்பு தகவல் தளத்தைக் குறிப்பது. இது ஒன்றுக்கு மற்றொன்று தொடர்பு அட்டவணைகளைக் கொண் டது. இதில் பல அட்டவணைகளில் பல புலங்கள் இருக்கும். இப்புலங்கள் அட்டவணைகளுக்கிடையே தொடர்பை உண்டாக்கும். பொதுப் புலங்கள் திறவுகள் எனப்பெயர் பெறும். இந்த தகவல் தளம் தற்காலத் தொழில் நிறுவனங்களில் இன்றியமையாத உறுப்பாக உள்ளது.

முதன்மைத் திறவு என்பது ஒரு தகவல்தளத்தில் ஓர் ஆவணத்தை இனங் காண்பது. தொடர்புத் தகவல் தளங்களில் இத்திறவு ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களைக் கொண்டிருக்கும். காட்டாக, Emp No. என்பது வேலையாளர் எண் ஆகும். இது சிறப்பாக ஒரு வேலையாளின் ஆவணத்தை இனங் காட்டும்.

relational system - தொடர்பு முறை : இது ஒரு வகைத் தகவல் தளமேலாண் முறை. இதில் தகவல்கள் அட்டவணைகளாகக் குறிக்கப்படும். இதில் ஒவ்வொரு பதிவும் ஒரு மதிப்பை மட்டும் கொண்டிருக்கும்.

relative address - சார்பு முகவரி : ஒரு கட்டளையின் முகவரிப் பகுதியைக் குறிக்கும் எண். அடிநிலை முகவரியைப்