பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

relay

189

reo


பொறுத்தவரை தேவைப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டுவது. இம்முகவரியுடன் அடிநிலை முகவரியைச் சேர்த்துத் தனி முகவரியைப் பெறலாம்.

relay centre - அஞ்சல் செய் மையம் : இது ஒரு சொடுக்கும் மையம். இதில் செய்திக் குறிகைகள் பெறப்பட்டு நேரடியாகத் தானியங்கு முறையில் பல வெளிப்பலன் சுற்றுகளுக்கு அனுப்பப்படும். செய்தியிலுள்ள தகவலுக்கு ஏற்ப இது நடைபெறும்.

release - விடுவி : ஒரு குறிப் பிட்ட நிகழ்நிரலின் கட்டுப்பாட்டிலிருந்து நினைவகப் பகுதி அல்லது வெளிப்புற அலகை விடுவித்தல். இது ஒரு நிறைவேறிய செயலால் நடைபெறுவது. விடுவிக்கப்பட்ட வன்பொருள் வேறு நிகழ்நிரலுக்கு ஆயத்தமாகும்.

relocate - மீளிடம் அளி : ஒரு நிகழ்நிரலிலுள்ள கட்டளைகள் தாமாக மாறுவதை இது குறிக்கும்.

relocation register - மீளிடப் பதிவகம் : இது வன்பொருள் கூறு. ஒரு கணிப்பொறியிலுள்ள ஒவ்வொரு நினைவக இடத்திற்கு முகவரியை அனுப்பும் ஒரு மாறிலியைக் கொண்டது இது.

remote - தொலைவிலுள்ளது : ஒம்பு பொறியிலிருந்து சிறிது தொலைவில் வெளிப்புற அலகு.

remote computing system - தொலைக் கணிப்புமுறை : இது ஒரு வன்பொருள் அமைவு. இதில் தொலை முனையங்கள் நேரிடையாக ஒரு கணிப்பொறியுடன் இணைக்கப் பட்டிருக்கும். இதனால் பயனாளிகள் நேரிடையாக மைய முறையாக்கியுடன் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தொலை முனையங்களிலிருந்து பயனாளிகள் தகவல்களைத் தொகுக்கலாம், பிழை நீக்கலாம், ஆய்ந்து பார்க்கலாம். தங்கள் நிகழ்நிரல்களை நிறைவேற்றலாம்.

remote processing - தொலை முறையாக்கல் : இம்முறையில் தகவல்கள் தொலைவிலுள்ள நிலையங்களிலிருந்து செய்திகளாக ஒரு கணிப்பொறியால் செலுத்தப்படும். தகவல்கள் பின் முறையாக்கப்படும்.

remote processor - தொலை முறையாக்கி : கணிப்பொறியின் மைய முறையாக்கியிலிருந்து தொலைவிலுள்ளது இது. ஆனால், மைய முறையாக்கியின் இயங்கு தொகுதியின் முழுக்கட்டுப்பாட்டில் இதன் செயல்கள் உள்ளன.

reorganise - சீரமை : ஒரு புதிய கோப்புச் சேமிப்பில் தகவல்களைப் பதிதல், தகவல்களை மேம்படுத்த இது தேவை.