பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ret

192

roi


நாடாவில் அல்லது வட்டில் சேமித்து வைக்கப்படும் கால அளவு. இது பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் இருக்கலாம். இது தேவையைப் பொறுத்து அமையும்.

retrieval - மீட்பு : ஒரு கோப்பிலிருந்து தகவலைப் பிரித்தல். ஆவணங்களில் குறிப்பிட்ட திறவுகளும் அல்லது ஒட்டுகளும் இருக்கும். இந்த ஆவ ணங்கள் கோப்பில் அடங்கி இருக்கும். இத்திறவுகளைத் தேடவே இந்த மீட்பு.

return - திருப்பம் : ஒரு துளை நடைமுறைச் செயல் முடிவுறும் பொழுது உள்ள கட்டளை. கட்டுப்பாட்டை முதன்மை நிகழ்நிரலுக்குக் கொண்டு வர உதவுவது. இதைச் செய்வது திருப்பு கட்டளை.

RGB - Red, green and blue, the three primary colours.
சிபநீ
 : மூன்று முதன்மை நிறங்கள்.

ring network - வளை வலையமைவு : இதில் இடவியல் தொடர் வட்டம், சுற்றளவில் கணுக்கள் முனைகளாகக் குறிக்கப்படும். வளையத்திலுள்ள எல்லாக் குறுக்கிடும் கணுக்கள் வழியாகக் கணுக்களுக்கிடையே செய்திகள் செல்லும்.

robot - தொலை இயக்கி :
1) கணிப்பொறியால் இயங்கும் எந்திரம். அலுப்பு சலிப்பு இல்லாமல் வேலைகளைத் திரும்பத்திரும்பச் செய்யலாம். தவிர, வண்ணத்தெளிப்பு, பற்ற வைத்து இணைத்தல் முதலிய கடின வேலைகளும் இதன் மூலம் நடைபெறுபவை.
2)நிகழ்நிரல் அமைத்து எந்திரங் களைக் கட்டுப்படுத்துவது.
3) உற்பத்தித் துறையின் சரக்குகளையும் பொருள்களையும் கையாளுந் தானியங்கு கருவித் தொகுதி.
4) ஒரு செயற்கைக் கோள்.
5) நடக்கும் பேசும் கற்பனை எந்திர மனிதன்.

robotics - தொலை இயக்குவியல் : முன்னரே உறுதி செய்யப்பெற்ற செயல்களை நிறைவேற்றக் கணிப்பொறியால் கட்டுப்படுத்தப் பெறும் எந்திரங்களை ஆராயுந்துறை. எடு உந்து வண்டியில் உலோகத்தைப் பற்றவைத்து இணைத்தல், கோளின் மண்ணியலைப் பகுத்துப் பார்த்தல், திங்களின் மண் நன்கு பகுத்துப் பார்க்கப்பட்டுள்ளது.

roll in - உள்வாங்கல் : ஒர் இயங்கு தொகுதியில் ஒரு செயல்முறையை ஊக்குவித்தல். இதற்குச் செயல்முறையின் பகுதிகளை அடுத்தடுத்து முதன்மைச் சேமிப்புக்குக் கொண்டு வருதல்.

roll off - வெளிச் செலுத்தல் : இம்முறையில் ஆதிகோப்பு,