பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sea

195

sem


முறையாக்கு நிகழ்நிரலின் திறனைக் குறிப்பது. சிறப்புரு அல்லது சொல்லைக் காண இது பயன்படுவது.

search set - தேடுதொகுதி : படிவமைப்புச் சரத்தில் ஒரு தொகுதி உருக்கள் அமைந்திருக்க வல்லவை. இவ்வுருக்கள் சரத்தில் உட்பலனாக ஏற்றுக் கொள்ளப் படுபவை.

search time - தேடுநேரம் : குறிப்பிட்ட நிலைமையைச் சரிசெய்யுமளவுக்கு ஒரு தகவல் இனத்தை இனங்காண உதவும் சராசரி நேரம்.

secondary storage - துணைச் சேமிப்பு : முதன்மைக் கணிப்பொறிக்குப் புறத்தே தகவலைச் சேமித்தலும் மீட்பு செய்தலும்; நிகழ்நிரலுக்கு அணுக்கமுள்ளது.

secondary storage devices - துணைச் சேமிப்புக் கருவியமைப்புகள் :பா. auxiliary storage devices.

section, header - தலைப்பகுதி பா.. header section.

sections in C programme - சி நிகழ்நிரல் பகுதிகள் :
1) தலைப்பகுதிகள்
2) வகை அறுதியிடு பகுதி
3) கட்டளைப் பகுதி. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க

section, instruction - கட்டளைப் பகுதி : பா. instruction section.

sector - துறை : காந்த வட்டில் தகவல் சேமிப்பை அமைத்தல்.

security - பாதுகாப்பு : தகவலை அணுகுவதற்குரிய துணுக்கங்களை வரையறைப்படுத்தலும் செயற்படுத்தலும்.

seek - தேடு.

seek area - தேடு பகுதி : சேமிப்புப் பகுதி, ஆவணங்களைக் கொண்டது.

seek time - தேடு நேரம் : தேடுநிலைக்கு ஏற்றவாறு எழுதும், தலைப்பகுதியை நகர்த்துவதற்குத் தேவையான நேரம்.

segment - பகுதி : நிகழ்நிரலின் பிரிவு; நினைவகத்திலுள்ள கோப்பு.

segment mark - பகுதிக்குறி : ஒரு நாடாக் கோப்பில் தனிப் பகுதியிலுள்ள உரு.

select - தேர்வு செய் : ஆய்வு செய்து உரிய செயலைத் தெரிவு செய்தல்.

selector - தேர்வி : குறிப்பிட்ட நிலைமைகள் இருப்பதை ஆய்ந்தறியும் கருவியமைப்பு.

semantic error - சொற்பொருள் பிழை : ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல்.