பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

soft

201

SOWI

software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை மதிப்பிடும் தொகுதி.

software multiplexing - மென் பொருள் பன்மமாக்கல் : இது ஒரு செய்முறை. பன்ம நிகழ் நிரல் முறையில் அல்லது நேரப் பகிர்வில் பயன்படுவது.

software packages - மென் பொருள் அடைப்பங்கள் : இவை பல. இவற்றை எச்டிஎம் எ ல் உருவாக்க உதவுவது. இவை தாமாகவே நம்மிட முள்ள பாடத்தை எச்டிஎம்எல் குறி முறையாக மாற்றும். எ-டு

மைக்ரோசாஃப்ட் 97, பிரண்ட் |

பேஜ், நைட்ஸ்கேப் கம்போசர். காட்டாக, மைக்ரோசாஃப்ட் 97 ஐப் பயன்படுத்தி நாம் பாடத் தை வடிவமைத்து அச்சியற்ற லாம். அந்த ஆவணத்தைப் பின் எச்டிஎம்எல் ஆவண மாகச் சேமிக்கலாம்.

solid state computer - திண்ம நிலைக் கணிப்பொறி : அரை குறைக் கடத்திகளைக் கொண் டுள்ள பகுதிகளையும் சுற்று களையும் கொண்டு அமைக் கப்பட்ட கணிப்பொறி.

solid state memory - திண்ம நிலை நினைவகம் : இதன் கூறுகள் ஒருங்கிணை சுற்று கொண்ட இருநிலை பன்ம அதிர்விகளுடன் கூடியவை. இந்தினைவகத்தில் தகவல்கள் இருநிலைகளில் ஏதாவது ஒன்றில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.

sophisticated vocabulary - நேர்த்தியான சொல்வளம் : மேம்பட்டதும் விரிவானது மான சொல்தொகுதி. சிக்க லான செயல்களையும் செய்ய உதவும்; கணிப்பொறியில் அமைந்துள்ளது.

sorting - பிரிப்பு : இனங் காணும் முறைப்படி தகவல் இனங்களை ஒழுங்கு செய்தல். இனங்காண் எண், அகரவரிசை எண், தகவல் தளத்தைக் கை யாளும் முறைகளில் ஒன்று. மேலும், பணிக் குழுவினர் பட்டியல், வெற்றி பெற்ற மற்றும் தோல்வியுற்ற மாண வர்களின் எண்ணிக்கை முதலி யவற்றையும் பிரித்து அறிய லாம்.

sound files - ஒலிக் கோப்புகள்

பல படிவமைப்புகளில் கணிப்

பொறியில் இக்கோப்புகள் சேமித்து வைக்கப்பட்டிருக் கும். இவற்றில் மிகப் பரவலாக உள்ளது அலைப்படிவமைப்பு, அடிப்படை ஒலிப்படிவ மைப்பு, மிடி படிவமைப்பு.

source address - மூல முகவரி : இரு முகவரிக் கட்டளையில் முதல் முகவரி. இரண்டாவது முகவரி இறுதியிட முகவரி.