பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sta

204

Star


stack - அடுக்கு : நினைவிடங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ள தொகுதி. இதில் இறுதியில் வந்தது இறுதியில் செல்ல வேண்டும் என்னும் அடிப்படை கொண்டது. இதில் வரிசைமுறையில் சேமிக்கப்படும் தகவல்கள் சில சார்புகளுக்குத் தேவை. பா. Last in first out.


stacker - அடுக்கு : துளையிட்ட அட்டைகளைக் கொண்ட கொள்கலம்.


stack operation - அடுக்குச் செயல் : கணிப்பொறித் தொகுதியைக் குறிப்பது. இதில் கொடிகள், திரும்பு முகவரி மற்றும் தற்காலிக முகவரிகள் உள்ளகத்தில் வரிசை முறையில் சேமித்து வைக்கப்படும்.


staging - அசைத்தல் : ஒரு சேமிப்புக் கருவியமைப்பிலிருந்து மற்றொரு சேமிப்புக் கருவியமைப்புக்குத் தகவல் தொகுதியை நகர்த்தல்.


standard bus - திட்டப் போக்கு வாய்.


standard code sets - திட்டக் குறிமைத் தொகுதிகள் : தேசிய மற்றும் அனைத்துலக அமைப்புகளால் வரையறுக்கப்பட்ட குறிமைத் தொகுதிகள் எடுத்துக்காட்டு : அன்சை, சிசிஐடிடி.


standard interface - திட்ட இடைமுகம் : இது ஒரு வன்பொருள் தொகுதி. வெளிப்புற அலகுகளை மைய முறையாக்கியுடன் இணைப்பதற்குரிய உட்பலன் / வெளிப்பலன் வழிகளையும் திட்ட முறைமைச் சுற்றுகளையும் அளிப்பது.


standardization - தரப்படுத்தல் : அளவைசெய்தல். ஓர் எண்ணின் மிதப்புப்புள்ளிக் குறியிடலை மாற்றீடு செய்யும் முறை. அதன் இயல்பான வடிவத்தினால் இதைச் செய்யலாம்.


standard modules - திட்ட அலகுகள் : இவை மாறிலிகள், மாறிகள், செய்முறைகள் ஆகிய எல்லாவற்றின் அலகு மட்ட அறுதியீடுகளைக் கொண்டவை.


Star Office - ஸ்டார் ஆபீஸ் : இது பல பயன்பாடுகளைக் கொண்டது. இவை எல்லாம் ஒருங்கிணைந்த சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் நாம் பலகாரியங்களைச் செய்யலாம். இவற்றின் வேலைகளில் சில பின்வருமாறு.

1) ஸ்டார் ரைட்டரைப் பயன்படுத்திப் பாட ஆவணங்களை உருவாக்கும்.

2) ஸ்டார்சால்கைப் பயன்படுத்தி விரிதாள்களை உருவாக்கும்.

3) ஸ்டார்பிரசைப் பயன்படுத்தி அளிப்புகளை உண்டாக்கும்.

4) ஸ்டார் டிராவைப் பயன்படுத்தி வரையவல்லது.

5) ஸ்டார்பேசைப் பயன்படுத்தித் தகவல் தளத்தை உருவாக்குவது.

இதன் பயன்பாடு வேறுபட்ட