பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sym

210

sys


இதை நாம் நன்கறிய இயலும். நிறைவேற்றப்பட இம்மொழி எந்திர மொழியாக மாற்றப்பட வேண்டும்.


symbolic name - குறியீட்டுப் பெயர் : இது ஒரு குறிப்பு. நிகழ் நிரல்களில் பயன்படுவது. மூலமொழியில் எழுதப்படுவது. இம்மொழி தகவல்கூறுகள், கட்டளைகள், வெளிப்புற அலகுகள் ஆகியவற்றோடு தொடர்புடையது. பொதுவாகக் குறியீட்டுப் பெயர்கள் நினைவுக்குறிப்புக் குறிமைகளைப் பயன்படுத்துவது.


symbolic programming - குறியீட்டு நிகழ்நிரல் : மூல மொழியில் நிகழ்நிரலை எழுதுதல்.


synchronization - ஒத்திசையச் செய்தல் : செலுத்தியும் பெறுவியும் கட்ட நிலையில் ஒன்றுடன் மற்றொன்று ஒத்திசைந்து இயங்குமாறு செய்வதற்குரிய குறிகைகள்.


synchronizer - ஒத்திசைவி : இது சேமிப்புக் கருவியமைப்பு: தாங்கியாகச் செயல்படுவது. கருவியமைப்புகளுக்கிடையே செலுத்தும் தகவல்களின் விளைவுகளை ஈடு செய்வது. இக்கருவியமைப்புகள் வேறுபட்ட அளவுகள் இயங்கும்.


synchronous computer - ஒத்திசை கணிப்பொறி : இதில் எல்லாச் செயல்களின் நேரமும் ஒரு கடிகையிலிருந்து வரும் சம விரைவுக் குறிகைகளால் கட்டுப்படுத்தப்படும்.


synchronous data communication - ஒத்திசை தகவல் தொடர்பு : இதில் ஒரு பொதுக் கடிகாரக் குறிகையுடன் செலுத்தும் மற்றும் பெறும் கருவியமைப்புகள் ஒத்திசையுமாறு செய்யப்படும்.


syntax - சொற்றொடரியல் : இது இலக்கண விதிகள் அடங்கிய தொகுதி. நிகழ்நிரல் மொழியின் அமைப்பை வரையறை செய்வது.


SYSGEN, System Generation - சிஸ்ஜென், அமைப்பு இயற்றல், அஇ : ஒரு கணிப்பொறியில் ஓர் இயங்கு தொகுதியை இயற்றலும் தொடங்கி வைத்தலுமாகிய முறை.


system - அமைப்பு : ஓர் அலகைத் தோற்றுவிக்கும் பொருள்களின் தொகுதி. இவை ஒன்றுடன் மற்றொன்று தொடர்புள்ளவை.


systems analyst - அமைப்புப் பகுப்பாளர் : கணிப்பொறித் தொடர்பான தேவைகளை இனங்கண்டறிந்து அவற்றைச் செயற்படுத்த நிரல் வகுப்பவர். இது அலுவலகத் தொடர்பான எல்லாச் செயல்களையும் குறிக்கும்.


systems definition - அமைப்பு