பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sys

211

tab


வரையறை : அமைப்புப் பகுப் பாளர் உருவாக்கும் ஆவணம்.

systems design - அமைப்பு வடிவமைப்பு : நடப்பிலுள்ள முறைகளை ஆராய்தலும் பதிவு செய்தலும் புதியமுறைகளை வடிவமைத்தலும்.

systems events - அமைப்பு நிகழ்வுகள் : இவற்றில் காலக்குறிப்பிச் செயல்கள், தகவல் அணுக்கப் பிழைகள், படிவ நிலை மாற்றங்கள், கட்டுப் பாட்டு நிலை மாற்றங்கள் முதலியவை அடங்கும்.

systems flowchart - அமைப்பு விதி முறைப்படம் : இதில் விதிமுறைக் குறியீடுகள் குறிப்பிட்ட எழுத்துத் தகவல் ஆயத் தத்தைக் குறிக்கும்; அமைப்பு வடிவமைப்பில் இணைந்த கணிப்பொறிச் செய்முறைகளும் இதில் சேரும்.

systems network architecture - அமைப்புவலையமைவுக் கட்டமைப்பு : இது தகவல் வலையமைவு மரபுச் சீரைக் குறிக்கும்; ஐபிஎம்மால் உருவாக்கப்பட்டது. ஓம்பு முறையாக்கி களுடன் முனையங்களை இணைக்கும் திட்டமுறையாகும். ஒம்பு முறையாக்கியில் தனிப் பயன்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளப்பயன்படுவது.

systems recovery time - அமைப்பு மீட்பு நேரம்: மீட்புக்குரிய காலம், வேறு பெயர் மீள் ஒட்ட நேரம்.

system software - அமைப்பு மென்பொருள் : ஓர் அமைப்பிற்காக எழுதப்படும் பொதுவான நிகழ்நிரல்கள். இவை பயன்பாட்டு மென்பொருள்களைஎழுதுவதற்குரிய சூழலை ஏற்படுத்தும். அமைப்பு நிகழ் நிரல்களில் சில: 1)தொகுப்பி, 2)கோவையாக்கி, 3)மொழி பெயர்ப்பி, 4)நிரல் ஏற்றி.

T

tab - தத்தி : உரையாடல் பெட்டியில் வேறுபட்ட தெரிவுகளைக்காட்டப் பயன்படுவது.

table - அட்டவணை: நினை வகத்தில் அமையும் தகவல் வரிசைக் குறிப்பிட்ட திறவைப் பயன்படுத்தித் தனித் தகவல் இனங்களை மீட்கலாம். அட்டவணையாக இருக்கும் பொழுது, தகவல்களை எளிதாகப் படிக்கலாம். இதற்கு <TABLE> மற்றும் <TABLE> ஒட்டுகளைப் பயன் படுத்த வேண்டும். இந்த ஒட்டு, அகலம், நுண்ணறை இடைவெளி, நுண்ணறை உள்வெளி, கரை இயல்புகளைப் பயன்படுத்தும். அட்டவணையில் <TR> மற்றும் <TR> ஒட்டுகள் வரிசைகளை வரையறை செய்யும். <TH> மற்றும் <TD> ஒட்டுகள் நுண்-