பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tab

212

tag


ணறைகளின் உள்ளடக்கங்களைக் குறிக்கப் பயன்படும். <TH> ஐப் பயன்படுத்தி உருவாக்கப்படும் நுண்ணறைகளின் உள்ளடக்கங்கள் மையமாகவும் தடிப்பாகவும் இருக்கும். இவ்விரு முடிவு ஒட்டுகளுக்குரிய ஒத்த முடிவு ஒட்டுகள் </TH> மற்றும் </TD> ஆகும்.

table attributes - அட்டவனை இயல்புகள் : இவை பின்வரு மாறு. 1) அகலம், 2) நுண்ணறை இடைவெளிவிடல் 3)நுண்ணறை உள் வெளி 4)கரை.

table formatting - அட்டவனைப் படிவமாக்கல் : இதை உருவாக்கக் கருவிப்பட்டை உதவும். இதில் பல நுண்படங்கள் இருக்கும். இவை அட்டவணைத் தொடர்பான பல வேலைகளுக்குப் பயன்படுபவை. ஒ. page formatting.

tabular language - அட்Lவணை மொழி : முடிவு அட்டவணைகள் தொடர்பாக நிகழ்நிரல் தேவைகைளக் குறிப்பிடப் பயன்படுவது. இங்கு அட்டவணை, சிக்கல் வழி நிகழ்நிரல் மொழியின் பணியை நிறைவேற்றுவது.

tags - ஒட்டுகள் : கோண அடைப்புகளில் (< >). இவை திறவுச்சொல்லைக் கொண்டிருக்கும். இச்சொல் ஒட்டின் வேலையைக் குறிக்கும். எ-டு. <HEAD>, <TITLE>, <HTML> ஒட்டுகள் பொருள் உணர்வு இல்லாதவை. பெரும்பாலானவை இணையாக இருக்கும். முதல் ஒட்டு தொடங்கு ஒட்டு எனப்படும். இது ஒரு விளைவு தொடங்குவதைச் சுட்டும். இரண்டாம் ஒட்டு முடிவு ஒட்டு எனப்படும். ஒரு விளைவின் முடிவைக் குறிப்பது.

tags, kinds of - ஒட்டுகளின் வகைகள் : இவை பின்வரு மாறு. 1) கூடுடை ஒட்டுகள் : இவை ஒட்டுக்குள் ஒட்டாகும். இவற்றில் உடல் ஒட்டு. எச்டிஎம்எல் ஒட்டினுள் அமையும்.

2) கரை, சாய்வெழுத்து. கீழ்க் கோடு மற்றும் மைய ஒட்டுகள் : இவை பாடத்தைக் கொட்டை எழுத்திலும், சாய்வெழுத்திலும் அமைத்துக் கீழ்கோட்டுப் பக்கத்தின் மையத்தில் வைக்க உதவுபவை.

3) BR ஒட்டு : இது கரை ஒட்டு. இது வரிமுறிவை உண்டாக்குவது.

4) P ஒட்டு : இது பத்தி ஒட்டு. ஒரு புதிய பத்தியைக் குறிப்பது.

5) தலைப்பு ஒட்டுகள் : இவை கொட்டை எழுத்து ஒட்டுகள்.

6) கிடைமட்டக் கோட்டு ஒட்டு : கிடைமட்டக் கோடுவரைய இது உதவும்.