பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tag

213

Tamil


7) சிறிய ஒட்டு : சிறிய எழுத்தில் பாடத்தைக் காட்டுவது. 8) எழுத்து வகை ஒட்டு : எழுத்துவகை, அளவு, நிறம் ஆகியவற்றைக் குறிக்க இது பயன்படும். 9) மார்குயூஸ் ஒட்டு : பாடத்தை உருளச் செய்வது இது. 10) உருவ ஒட்டு : பாடத்தில் உருவத்தைச் சேர்ப்பது. 11) ஒலிஒட்டுகள் : இவை ஒலிக் கோப்புகளில் பயன்படுபவை.

tag format - ஒட்டுப் படிவமைப்பு : ஆவணங்களைக் குறிப்பிட்ட வடிவத்தில் அமைத்தல்; அவற்றை ஒட்டுகளாகப் பயன்படுத்தல்.

takedown time - எடுக்கும் நேரம் : எடுக்கும் செயலை முடிக்கத் தேவைப்படும் நேரம்.

tally reader - உடன்படு படிப்பி: உடன்படு பட்டியலிலிருந்த தகவல்களை அச்சிட்ட எழுத்துகளாகப் படிக்கும் எந்திரம். எ-டு ஒளியுரு அறிதலைப் பயன்படுத்தல்.

Tamil and Internet - தமிழும் இணையமும் : இந்திய மொழிகளில் முதன்முதலில் இணையத்தில் அறிமுகமாகியது தமிழாகும். தமிழ்ச் சொல் முறையாக்க மென்பொருள் 1978 வாக்கில் தொடங்கியது. எல்லாத் தமிழ் எழுத்துகளையும் விசைப் பலகையில் அடக்கலாம். மின்னஞ்சலிலும் பயன்படுவது. தமிழ்ப் பேரகராதி, சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருக்குறள் முதலியவை இணையத்தில் உள்ளன.

Tamil Internet 2000 - தமிழ் இணையம் 2000 : இது மூன்றாம் அனைத்துலக மாநாடு. தமிழ் அடிப்படையில் அமைந்த இணையத்தைத் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை வளர்ப்பதற்குப் பயன்படுத்தல். 22-24 ஜூலை, 2000 சிங்கப்பூரில் நடந்தது. தமிழ் இணையம் 1998 சிங்கப் பூரிலும் தமிழ் இணையம் 1999 சென்னையிலும் நடந்தன. சென்னையில் நடந்த மாநாட்டில் தமிழ் விசைப்பலகை அளவை செய்யப்பட்டது.

Tamil Internet keyboard - தமிழ் இணைய விசைப்பலகை 1999: 15-06-99 அன்று முதலமைச்சர் அவர்களால் முறைப்படி இது துவக்கி வைக்கப்பட்டது. தமிழ் இணையம் 1999 இல் திட்டப்படுத்தப்பட்டு அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

Tamil Satyam - தமிழ் சத்தியம் : இது மிக விரிவான தமிழ் வலையத்தளம். உலகம் முழுவதும் உள்ளது. உலகத்தை இதன் வழி காணலாம். சிங்கப்