பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tool

219

tra


1) திட்டக் கருவிப்பட்டை : இது தவறுதல் கருவிப்பட்டை திரையின் மேலுள்ளது.

2) பதிப்புக் கருவிப்பட்டை : விஷூவல் பேசிக் குறிமையைப் பதிப்பிக்கும் பொழுது அதற்கு உதவப் பல தகவல் இனங்களைக் கொண்டது.

3) பிழை களையும் கருவிப் பட்டை : பிழை நீக்க உதவுவது.

4) படிவப் பதிப்பியற்றி : சரி செய்யும் தகவல் இனங்களைப் படிவங்களில் கொண்டது.


tool box - கருவிப் பெட்டி : படிவத்திற்குரிய பல கட்டுப்பாடுகளையும் இது கொண்டது. கட்டுப்பாடுகள் ஒன்றில் சுட்டெலிக் குறிப்பியை நகர்த்த ஒரு சிறிய மேல் மீட்புக் கருவிக் குறிப்பு தெரியும். இது கட்டுப்பாட்டைச் சுருக்கமாக விளக்கும். ஒரு புதிய திட்டம் தொடங்கும் பொழுது இக்கட்டுப்பாடுகள் முன்கூட்டியே கருவிப் பெட்டியில் சேர்க்கப்படும்.


trace - சுவடு : மென்பொருள் செய்முறையின் பொழுது தோன்றும் எல்லாப்படி நிலைகளின் பட்டியல் முறைமைப்