பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

une

222

USART


டாம் முறையாக்கு நிலையில் இன்னது என்று கூறலாம்.

unconditional branch in-struction - நிபந்தனையற்ற கிளைக் கட்டளை : ஒரு நிகழ் நிரலின் மற்றொரு பகுதிக்குக்கட்டுப்பாட்டை மாற்றுவதற் குரிய கிளைக்கட்டளை.

unexpected halt - எதிர்பாரா நிறுத்தம் : குறுக்கீடு இல்லாமல் ஒரு நிகழ்நிரலில் ஏற்படும்தடை

uniform resource locator, URL - ஒரு சீர் இடங்காணி, ஓசீஇ : ஒவ்வொரு இடையப் பக்கத்தின் (வெப்பேஜ்) தனித்த முகவரி இது; நம் அஞ்சல் முகவரி போன்றது.

unit delay - அலகுத் தாமதம் :இது வலையமைவு தொடர்பானது. இதன்வெளிப் பலன் ஓரலகு நேரத்தால் தாமதிக்கப்படும் உட்பலனுக்குச் சமம்.

uniterm - ஒற்றைச் சொல் : ஒரு சொல், குறியீடு அல்லது எண் ஒரு திரட்டிலிருந்து தகவலை மீட்க, ஒரு வண்ணனையாகப் பயன்படுத்தப்படுவது.

unitor - ஒருங்கியக்கி : கணிப்பொறிகளில் பூல் செயல் ஒன்று கையை ஒத்த வேலையைச் செய்யும் கருவியமைப்பு அல்லது மின் சுற்று.

unit - அலகு : ஒப்பீட்டு அளவு மதிப்பு. அதே அளவின் மற்ற மதிப்புகளை தெரிவிக்கப பயன்படுவது.

unit record - அலகாவணம் :சேமிப்பு ஊடுகம். எ-டு துளையிட்ட அட்டை.

unit string - அலகுச்சரம் :ஒரே ஒரு உறுப்புள்ள சரம்.

UNIX - யூளிக்ஸ் : இந்த இயங்கு தொகுதி பயனாளிகளைக் கணிப்பொறியோடு ஒரேசமயம் வேலை செய்ய அனுமதிப்பது. ஆக, இது பன்மப்பயனாளி இயங்கு தொகுதியாகும். இது கோப்புகள் அடைவுகள் ஆகியவற்றை எவரும் முறைகேடாக அணுகாவண்ணம் பாதுகாப்பளிப்பது

unmodified instruction - மாறாக்கட்டளை:அடிப்படைக் கட்டளை.

unpaged segment - பக்கமிடாப் பகுதி :பக்கங்களாகப் பிரிக்கப் படாத பகுதி.ஆகவே, இது முதன்மைச் சேமகத்திற்கும் மாயச் சேமகத்திற்கும் இடையே ஒரு முழுத் தொகுதியாக மாற்றப்படுவது.

unused time- பயன்படா நேரம் :இந்நேரத்தில் சொடுக்கி திறக்கப்படும். கருவி வேலை செய்யாது.

unwind - அகற்று : கட்டளைகள் கொண்ட வரிசையைக் குறிப்படுத்தலும் மீள் ஒழுங்கு செய்தலும்.சிவப்பு நாடாச்