பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

user

223

until


செயல்களை நீக்கப் பயன் படுவது.

update - மேம்படுத்து : கோப்புகள் ஆவணங்கள் முதலிய வற்றை உயர்வாக்கல்,

USART, Universal Synchronous | Asynchronous Receiver ! Transmitter யூசார்ட், அனைத்து ஒத்திசையும் / ஒத்தி சையாப் பெறுவி / செலுத்தி, அஒஒபெசெ இது வெளிப்புறக் கருவியமைப்பைக் குறிக்கும். மையச் செயலகத்திலிருந்து ஒரு போக்குத் தகவலை இக்கருவியமைப்பு செலுத்துகைக்காகத் தகவல் தொடராக மாற்றும். அதே சமயம் தொடர் தகவல்களைப் பெற்றுக் கணிப் பொறிப் பயனுக்காக, அவைகளை ஒருபோக்குப் பிட்டுகளாகவும் இக்கருவியமைப்பு மாற்றவல்லது.

user defined character -பயனாளி வரையறையுள்ள உரு : ஒரு குறிமைத் தொகுதியிலுள்ள உரு.

user friendly -பயனாளி நண்பி : சிறப்பறிவு இல்லாமல் ஒரு பயனாளி இயக்கக்கூடிய மென்பொருள் அல்லது வன்பொருள் தொகுதி.

user group, UG -பயனாளிக் குழு, பகு : குறிப்பிட்ட கணிப்பொறியைத் தகவல் பகிர்வுக்காகப் பயன்படுத்தும் மக்கள்.

user hot line -பயனாளி நேரடிச் செய்தித் தொடர்பு:உற்பத்தியாளருக்கு நேரடித் தொலைபேசி அணுக்கம். பயனாளிகளிடம் தங்கள் பொருள்கள் குறித்த சிறப்பு களைக் கூறல்,

user interaction -பயனாளி இடை வினை : கணிப்பொறித் தொகுதிக்கும் பயனாளிக்கும் இடையே உள்ள வினைமிகு செய்தித் தொடர்பு.

User memory -பயனாளி நினைவகம் : இது மையச் செயலக நினைவகம். பயனாளி இதற்கு அணுக்கம் உடையவர். பயன்பாட்டு நிகழ்நிரல்களால் பயன்படுத்தப்படும் வரம்பிலா அணுக்க நினைவகத்தின் ஒரு பகுதி.

user port-பயனாளி வாயிள்:ஒரு தகவல் தொடர்பு வலையமைவில் கணிப்பொறியோடு பயனாளி தொடர்புகொள்ளும் வாயில்.

using screen savers -திரைக் காப்பிகளைப் பயன்படுத்தல் : வேடிக்கைக்காகப் பயன்படுத்தலாம். இவை பல.

USRT, Universal Synchronous Receiver / Transmitter -யூசர்ட், அனைத்து ஒத்திசை பெறுவி / செலுத்தி, அஒயெசெ: இது விரைவுச் செலுத்தி மாற்றி. இதில் ஒத்திசை கருவியமைப்பு உள்ளது. இதில் தொடர் தக-