பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

util

224

vari


வல் ஒரு போக்கு தகவலாகவும், ஒரு போக்கு தகவல் தொடர் தகவலாகவும் மாறும்.

utility functions -பயன்பாட்டு வேலைகள் : பொது முறைச் செய்முறைகளைச் செய்யப் பயன்படுபவை இவை. எ-டு அச்சிடல், நகரும் தகவல், வட்டிலிருந்து படித்தல்.

utility routines-பயன்பாட்டு நடைமுறைகள் : அமைப்பு நிகழ்நிரல்களின் தொகுதியை இவை குறிக்கும். வன்பொருள் வழங்குபவரால் அளிக்கப்படுபவை. குறிப்பிட்ட வேலைகளைச் செய்யப் பயன்படுபவை.

V

validation -செல்திறனாக்கல்: தரத்திற்கேற்றவாறு இருப்பதற்குரிய ஆய்வைச் செய்தல்.

validity check -செல்திறன் சரிபார்ப்பு : குறிப்பிட்ட வரை யறைகளுக்குள் தகவல் தவறுவதை உறுதிசெய்யும் சரிபார்ப்பு.

valid programme -செல்லுபடியாகும் நிகழ்நிரல் : இது ஒரு கணிப்பொறி நிகழ்நிரல். இதன் கூற்றுகள் தனியாகவும் தொகுதியாகவும் நிகழ்நிரல் மொழியின் சொற்றொடரியல் விதிகளைப் பின்பற்றுபவை. இவை எந்திர மொழி நிகழ்நிரலாக மாற்றுவதற்குரியவை.

value - மதிப்பு : இது பாடப் பெட்டி மதிப்பு. இப்பெட்டியின் தவறுதல் மதிப்பைக் குறிக்கப் பயன்படுவது.

variable -மாறி:ஒரு நிகழ் நிரலில் பயன்படும் குறியீடு. ஒரு மதிப்புள்ள அளவை இது குறிக்கும். இம்மதிப்பை நிகழ் நிரல் நிறைவேற்றலின் பொழுது மறு ஒதுக்கீடு செய்யலாம். நினைவக இடமே மாறிலியாகும். இதற்குப் பெயர் உண்டு.ஒ. Constant.

variable block -மாறுதொகுதி : தொகுதியின் அளவு நிலையாக இல்லாமல் மாறுவது. இது தகவல் தேவைகளைப் பொறுத்து அமையும். variable connector -மாறு இணைப்பி :விதிமுறைப் படத்தில் ஒரு முனைக்குமேல் இணைக்கப்படும் இணைப்பி.

variables, kinds of -மாறியின் வகைகள் : நினைவக இடத்தில் தகவல்கள் உள்ளதைப் பொறுத்து மாறிகள் வகைப்படுத்தப் படுகின்றன. அவ்வகையில் இவை நான்கு.

1) முழுஎண் மாறிகள் ; இவை மேலும் நான்கு வகை. i) நீள் முழுஎண் மாறிலி, ii)குறு முழு எண் மாறிலி, iii) குறியிலா முழு எண் மாறிலி, iv) முழு எண் மாறி.

2)மெய் மாறிகள் :இவை மேலும் இரு வகைப்படும்.