பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VTOC

230

web


வெளிப்பலன் கருவியமைப் பினால் இதிலுள்ளவற்றை எளிதாகப் படிக்கலாம், எழுதலாம்.

VSNL, Videsh Sanchar Nigam - விஎஸ்என்எல், விதேஷ் சஞ்சார் நிகம், விசதி : உலக அளவுச் செய்தித் தொடர்புள்ள இந்திய நிறுவனம். உலகத்தை அறியும் இந்தியவாயில், தொலைத் தொடர்பு வலையமைவு.

VTOC, Volume Table of Contents - உள்ளடக்கப்படும் அட்டவணை, உபஅ : ஓர் இயங்கும் தொகுதி பயன்படுத்தும் அட்டவணை. நிகழ் நிரல் கோப்புகள் அல்லது தகவல்களை இடங் காண்பது. இயல்பாகக் கோப்புகள் வட்டில் அமைந்திருக்கும்.

V-34 - வி-34 : 33.6 கேஎம்பிஎஸ் வரை இயங்கும் இருபண்பிகளுக்குரிய நடப்புத் திட்ட அமைப்பு. (சீரி)

V-90 - வி-90 : 56 கேபிபிஎஸ் இருபண்பிகளுக்குரிய புதிய திட்ட அமைப்பு. அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டது.

W

waiting time - ஓய்வு நேரம் : மறைநேரம். சேமிப்புக்குத் தகவலை மாற்றுவதற்குக் கட்டுப் பாட்டு அலகு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் கணிப் பொறிச் சேமிப்பால் மாறுகை தொடங்குவதற்குரிய நேரத்திற்கும் இடையிலுள்ள நேரம்.

walk through - தொடர்ந்து செல்லல் : இதில் தொடக்கத் திலிருந்து முடிவு வரை வேறு பட்ட நிறைவேற்று வழிகள் பின்பற்றப்படுகின்றன. உட்பலனாகக் கொள்ளப்படும் மதிப்புகளுக்கேற்றவாறு இவ்வழிகள் அமையும்.

wall paper, changing - சுவர்த்தாள் மாற்றுதல் : இதுமேடையின் பின்னணிக் காட்சியாகும். பல தாள்கள் இருக்கும். எதை வேண்டுமானாலும் விரும்பியவாறு பயன்படுத்தலாம்.

WAP Wireless Application Protocol - வேப் : கம்பியிலாப்பயன்பாட்டுத் திட்ட அமைப்பு (சிரி)

web - இடையம் : வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள் உள்ள தகவல்கள் இருக்கும். இப்பக்கம் இணையப்பக்கம் (வெப்பேஜ்) எனப்படும். இப் பக்கத்தில் பாடம்,