பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

web

232

web

web page hosting - இடைய பக்கத்தை அமைத்தல் : இடையத்தின் ஒரு பகுதியாக நம் பக்கத்தை ஆக்குதல். அப்பொழுதுதான் இணையப் பயனாளிகள் இதைப் பார்க்க இயலும். ஒரு தனிப்பக்கத் தையோ முழுத் தளத்தையே நாம் உருவாக்க இயலும் தளத்தை உருவாக்குவதைவிடப் பக்கத்தை உருவாக்குதல் எளிது. எச்டிஎம்எல் குறிமுறையை எந்திரத்திலிருந்து பணிப்பிக்கு மாற்றுவதையும் இப்பக்கம் அமைத்தல் குறிக்கும்.


web reading - இடைய படிப்பு : பயனாளிகளில் 79 பங்கு அலகிடுதலையே விரும்புகின்றனர்; படிப்பதில்லை. கண்ப்பொறித் திரையிலிருந்து படிப்பது என்பது கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும். பொதுவாக நாம் தாளைப் படிப்பதைவிட 25% மெதுவானது. இடையத்தைப் பயன் படுத்துபவர்கள் மேன் மேலும் செல்ல விரும்புவதால் பொறுமையை இழப்பர். படிக்க வேண்டிய தகவல்களோ அதிகம். கணிப்பொறிப் பயனாளிக்கு வசதிக்குறைவை உண்டாக்கும் காரணிகள் பின் வருமாறு.

1) பணியின் இயல்பு

2) கணிப்பொறியில் செலவிடும் கால அளவு.

3) இமைப்பளவு (12-15 தடவை கள் / நிமி).

4) பணியிட வடிவமைப்பு, பார்க்கும் கண்ணாடி வடிவ மைப்பு ஆகிய இரண்டிற்கு மிடையே ஒருங்கிணைப்பு குறைவு. இக்காரணிகள் பார்வைத் தளர்ச்சியை உண்டாக்கும். கண்கள் உலரும்; பார்வை மங்கும். ஆகவே 1/2 மணி நேரத்திற்கு ஒரு தடவை இடைவேளை கொள்ளுதல் நல்லது.


website - இடையதளம் : மின்தளம். ஒன்றுடன் மற்றொன்று தொடர்புகொள்ளும் பக்கங்களின் தொகுதிக்கு இடையத்தளம் என்று பெயர்.


website creation - இடையதளத்தை உருவாக்கல் : இதற்கு இடையப்பக்கப் பதிப்பு இயற்றியைப் பயன்படுத்த வேண்டும். பதிப்பு இயற்றிகளில் சில தனி இயல்புகளைக் கொண்டிருக்கும். இவற்றிற்கு மாயாவிகள் என்று பெயர். இம்மாயாவிகள் படிப்படியாகத் தளம் அமைக்கும் செயலைத் தொடங்குபவை. பிரண்ட்பேஜ் எக்ஸ்பிரசைப் பயன்படுத்தியும் இத்தளத்தை உருவாக்கலாம். இதற்குத் தளத்தில் சேர்க்க வேண்டிய எல்லாத் தனிப் பக்கங்களையும் உரு வாக்க வேண்டும். பின் தொடக்கப் பக்கத்துடன் அவற்றை ஒரு சேர இணைக்கவும்.