பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Win

235

Win


1) பாடப் பெட்டிகள் : தகவல்களைப் பதிவு செய்ய.

2) பட்டியல் பெட்டிகள் : தெரிவுகளைத் திரையில்காட்டுவது.

3) கீழிறக்கப் பட்டியல்: பெட்டிகள் தெரிவுகளைத் திரையில் காட்டுவது.

4) வானொலிப் பொத்தான்கள்: பன்மத் தெரிவுகளைத் திரையில் காட்டுபவை.

5) சரிபார்ப்புப் பெட்டிகள்: இவை தெரிவுகளைத் தள்ளவும்,கொள்ளவும் பயன்படுபவை. 6) பொத்தான்கள் : இவை நீக்கும் அல்லது சரிசொல்லும் பொத்தான்கள். 7) தத்திகள்: வேறுபட்ட தெரிவுகளைத் திரையில் காட்டு

Windows, evolution of - சாளர வளர்ச்சி : சாளரத்தின் முதல் வடிவம் விண்டோஸ் 3.0. முதல் தடவையாகச் சாளரம் கோப்பு மேலாண்மை வசதிகளோடு வந்தது. இத்துடன் பிற அமைப்புக் கருவிகளும் இருந்தன. சாளரத்துடன் பயன் படக்கூடிய பல பயன்பாடுகளும் அங்காடிக்கு விரைவில் வரலாயின. இதனால் ஒரு சில ஆண்டுகளில் சாளரம் அலுவலகங்கள், வீடுகள், தொழிலகங்கள் முதலியவற்றில் பயன்படலாயின. அடுத்து விண்டோஸ் 3.1 சிறந்த இயல்புகளுடன் வெளிவந்தது. இதில் நிகழ்நிரல் மேலாளி ஒன்று இருந்தது. அதே சமயம், மைக்ரோசாப்ஃட் தொழிலாளர்களுக்காக விண்டோஸ் 3.1- ஐ உருவாக்கிற்று.இந்நிலையில் சாளரம் பேரளவு பகுதி அடிப்படையில் அமைந்த வலையமைவுச் சூழ்நிலையில் பயன்படலாயிற்று. இப்பொருள்களில் ஒன்றுகூட இயங்கு தொகுதியாக இல்லை. எம்.எஸ் டாஸ் உடன் வேலைசெய்த நிகழ்நிரல்களே. அடுத்த பெரும் வளர்ச்சி விண்டோஸ் 95 ஆகும். இது முழுக்க முழுக்க இயங்கு தொகுதியே. இப்பொழுது எம்.எஸ்-டிஒஎஸ் கட்டுப்பாடு நீங்கியது. இதனால் பயன்பாடுகள் அதிகமாயின. அடுத்து விண்டோஸ் 98 வரலாயிற்று. இது பல புதிய பயன்களை அளிப்பது. இணையத்துடன் தொடர்பு கொண்டு வேலை செய்ய உதவுவது.இறுதியாக இப்பொழுது மேம்பட்ட விண்டோஸ் 2000 வந்துள்ளது.

Windows Explorer - சாளர ஆராய்வி : இது ஒரு நிகழ்நிரல்.கோப்புகளையும் மடிப்பட்டைகளையும் மேலாண்மை செய்ய உதவுவது.

Windows, parts of - சாளர பாகங்கள் :

1) சொல் திண்டு : இது சொல்முறையாக்கி