பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Win

236

word

2) தலைப்புப் பட்டை : இது பயன்பாட்டின் பெயர் சொல்வது

3) அளவுப் பொத்தான்கள் : தலைப்புப்பட்டையில் உள்ளன. இவை மூன்று வகை

i) குறைந்த அளவுப் பொத்தான் சாளரத்தின் அளவைக் குறைப்பது. ii) உயரளவுப் பொத்தான் : சாளரத்தின் அளவை அதிகமாக்குவது. iii) மீட்புப் பொத்தான் சாளரம் தன் பழைய நிலைக்கு வர உதவுவது.

4) பட்டிப்பட்டை : தலைப்புப் பட்டைக்குக்கீழுள்ளது. வேறுபட்ட பட்டிகளைக் காட்டும்.

5) கருவிப்பட்டை : பட்டிப் பட்டைக்குக் கீழ் பல கருப்பட்டைகள் இருக்கும் இவை கோப்புகளைச் சேமிக்க உதவுபவை

Windows 98, uses of-strength 98 இன் பயன்கள் : இது பயனாளி நட்புள்ளது. எவரும் பயன்படுத்தலாம்.

1) இதிலுள்ள வரைகலைப் பயனாளி இடைமுகம் எல்லாத் தகவல்களையும் திரையில் காட்டவல்லது.

2) இதிலுள்ள பல பயனாளி நிகழ்நிரல்களைப் பயன்படுத்த உதவுவது :

1) கணிப்பான்

ii) வண்ணமிடல்

iii) சொல்லட்டை

iv) இணைய ஆராய்வி

v) படத்திரட்டு

3) இதில் மேலும் பல மென்பொருள் பயன்பாடுகள் உள்ளன : மைக்ரோ சாஃப்ட் ஆபீஸ்

4) ஒரே சமயம் பல பயன்பாடுகளை ஓடவிடலாம்.

5) மேசையை இருவழிகளில் பயன்படுத்தலாம்.

6) இதில் அருமையான இணைய இடைமுகம் உள்ளது.

7) எளிதாக இடையப் பக்கங்களை மேலோட்டமிடலாம்.

WML, Wireless Markup Language - டபுள்யூஎம்எல் கம்பியிலாக் குறிமைமொழி. கணிப்பொறி மொழிகளில் ஒருவகை.

word - சொல் : தகவல் அடிப் படை அலகு. பிட்டுகளின் கோலம். 8 பிட்டுச் சொல் g. bit, byte.

word format - சொல் படிவமைப்பு : ஒரு சொல்லில் உருக்களை அமைத்தல்.

word length - சொல் நீளம் : ஒரு சொல்லிலுள்ள பிட்டு களின் எண்ணிக்கை, (0க்கள் 1கள்)

word processing - சொல்முறையாக்கல் : இது கணிப்பொறி வழியமைந்த முறை அச்சிட்ட செய்தியை உருவாக்கல், பதிப்பித்தல், வரிசைப்படுத்தல், அச்சிடல், செலுத்தல் ஆகிய செயல்