பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Word

237

Write

கள் இதில் அடங்கும்.

word processor, WP - சொல் முறையாக்கி, சொமு : கணிவயப்பட்ட தட்டச்சு எழுதி. எழுதிய பொருளை அப்படியே உருவாக்கும் வகைப்படுத்தும், பதிப்பிக்கும், அச்சிடும், செலுத்தும். இதில் 5 பகுதிகள் உண்டு.

1) விசைப் பலகை : தகவலை உள்விடல்.

2) துண்முறையாக்கி : பதிப்புச் செயல் பற்றி முடிவு எடுப்பது.

3) காட்சித் திரை : பதிப்பித்த தகவலைத் திரையில் காட்டல்.

4) நெகிழ்வட்டு : கோப்புகள் சேமிக்கப்படுதல்.

5) அச்சியற்றி : பாடத்தை அச்சிட


word rate - சொல்வீதம் : ஒரு சொல் தொடங்குவதற்கும் அடுத்த சொல் தொடங்கு வதற்கும் கழிந்த கால அளவு. இது நிகழ் அளவு ஆகும்.


word size - சொல் அளவு : குறிப்பிட்ட அளவு பிட்டுகள் எ-டு 8 பிட்டுச் சொல்.


word time - சொல் நேரம் : நினைவகத்தில் தகவலுக்குரிய ஒரு சொல்லை முறையாக்க ஆகும் நேரம்


work area - பணிப் பகுதி : நினைவகப் பகுதி. இதில் தகவல் இனங்கள் முறையாக் கப்படும் பொழுது தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.


wordpad - சொல்லட்டை : இது ஒரு எளிய சொல்முறையாக்கி; ஒரு நிகழ்நிரல் பாடத்தை அச்சிடவும் சேமிக்கவும் உதவுவது.


working programme - செயல் படும் நிகழ்நிரல் : செல்திறனுள்ள நிகழ்நிரல். எந்திர மொழியாக மாற்றப்பட்டுக் கணிப்பொறியால் நிறைவேற் றப்படுவது.


workspace - பணியிடம் : கணிப்பொறி நினைவக இடம்: சரமுறையாக்கு மொழியில் முறைப்படுத்தப்பட வேண்டிய சரத்தைக் கொண்டது.


Word Computer Citizen - உலகக் கணிப்பொறிக் குடிமகன் : இம்மையம் பாரிசில் அமைந்துள்ளது. கணிப்பொறி அறிவை ஒவ்வொரு உலகக் குடிமகனுக்கும் வழங்குவது.


WorldTel - வோர்ல்டு டெல் : இலண்டனில் அமைந்துள்ள தனியார் துறை நிறுவனம். அனைத்துலகத் தொலைத் தொடர்பு ஒன்றியத்தால் உருவாக்கப்பட்டது. வணிக அளவில் வளரும் நாடுகளில் செய்தித்தொடர்பு அகக்கட்டமைப்பை வளர்ப்பது. இதன் தலைவர் திரு. சாம் பிட்ரோடா, தமிழ் நாட்டில் இணைய நிலையங்களை அமைத்து இணைய அறிவு வளரத் தமிழக