பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Bgc

26

bin

மாறாகப் பெரிதாகக் காட்டுவது. எப்பொழுதும் இது முடிவு பெரிய ஒட்டோடு பயன்படுத்தப்படும். எ-டு.

<BIG> Happy New Year</BIG> இது பின்வருமாறு திரையில் தெரியும்.

Нарpy New Year

Bgcolour attribute - பின்னணி நிற இயல்பு: உடல் ஓட்டோடு இது சேர்ந்து ஒரு பக்கத்திற்குரிய பின்னணி நிறத்தைச் சுட்டிக்காட்டும். Bg-back ground- பின்னணி.

Bharat Bhasha - பாரத் மொழி : மாய்ட் (MAT) நாஸ்கம் (NASSAGOM) ஆகிய இரண்டு அமைப்புகளும் மென்பொருள், வன்பொருள் துறைகள் சார்ந்தவை. பாரத் மொழி என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஆங்கிலம் பேசாதவர்களுக்காக வகுக்கப்பட்ட திட்டம். வட்டார மொழிகளில் கணித்தலை வளர்ப்பதே நோக்கம் (1998).

Bill Gates - பில்கேட்ஸ் : அமெரிக்க மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் தலைவர். கணிப்பொறிக் கோடீஸ்வரர். கணிப் பொறித்துறையில் மென்பொருள் உருவாக்குவதில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியவர். எ-டு விண்டோஸ். இணைய வளர்ச்சியிலும் இன்று அதிக நாட்டம் செலுத்திவருகிறார்.

பில் கேட்ஸ்

bin - குதிரகம் : காந்த நாடா நினைவகம். இதில் ஒரே தொகுதியாகக் காந்த நாடாக்கள் அமைந்திருக்கும்.

binary arithmetic - Arithmetic done with binary numbers, 0,1. The addition of binary numbers is the basis of binary arithmetic done by the arithmetic and logic unit of a microprocessor. இரும எண்கணிதம் : 0, 1 என்னும் இரும எண்களால் நடைபெறும் எண்கணிதம். எல்லா இரும எண்கணித அடிப்படை இரும எண் கூட்டலே. இது நுண்முறையாக்கியின் எண்கணித முறைமை அலகலால் செய்யப்படுவது.

binary arithmetic, components of - இரும எண் கணிதத்தின் பகுதிகள் : 1) நிரப்பு குறி