பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bran

30

brid

the control of a computer programme, a fundamental control structure. பிரிதல் : கிளைத்தல். ஒரு கணிப்பொறி நிகழ்நிரலின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகளைத் தேர்ந்தெடுத்தல். ஓர் அடிப்படைக் கட்டுப்பாட்டு அமைப்பு.

branching, kinds of - பிரிதல் வகைகள் : 1) இருவழிப் பிரிதல்: ஒரு வினாவைக் கேட்டு விடை 'ஆம்', 'இல்லை' என்று வருவதாக வைத்துக்கொள். விடையைப் பொறுத்துக் கிடைக்கக் கூடிய இரு வழிகளில் ஒன்றுக்குச் செல். 2) பல்வழிப் பிரிதல் : சில வினாக்களுக்கு 'ஆம்' அல்லது 'இல்லை' விடை இராது. எ-டு இச்சிறுவனின் அகவை என்ன? இதற்குரிய விடை பல முழு எண்களால் ஒன்றாக இருக்கும், விடையைப் பொறுத்து, வேறுபட்ட பல கணிப்பீடுகளைச் செய்ய வேண்டும். இதற்கு வேறுபட்ட வழிகளில் செல்ல வேண்டும்.

<BR>Tag-பிஆர் ஒட்டு : இது வரிமுறிவை உண்டாக்கப் பயன்படுவது. பா. tags.

brain - மூளை : ஒரு நிகழ்நிரல் மென்பொருளகத்தால் உருவாக்கப்பட்டது. கோப்புகள் இடையப் (வெப்) பக்கங்கள், அடைவுகள் ஆகியவற்றை அடைக்கப் பயன்படுவது.

branch instruction - The instruction making the computer choose between alternative sub-programmes. பிரிவு ஆணைக்குறிப்பு : மாற்றுத் துணை நிகழ்நிரல்களுக்கிடையே ஒன்றைக் கணிப்பொறி தேர்ந்தெடுக்குமாறு செய்யும் குறிப்பு.

break - An interruption of a transmission. முறிவு : ஒரு தகவல் செலுத்துகைத் தடைப்படல்.

break contact - The contact of a switching device opening a circuit upon the operation of the device. முறிதொடர்பு : சொடுக்கு கருவியமைப்பின் தொடர்பு. இது செயற்படும் கருவியமைப்பின் மின்சுற்றைத் திறப்பது.

breakpoint - A port in programme. Here the instructor digit enables a programmer to interrupt the run by external intervention. முறிநிலை : ஒரு நிகழ்நிரல் நிலை. இங்கு ஆணைக் கட்டளைக் குறிப்பு இலக்கம் ஓட்டத்தைத் தடைசெய்ய நிகழ்நிரலடுக்கு உதவும். இது புறக்குறுக்கீட்டினால் நடைபெறுவது.

bridgeware - Either software or hardware aids. இணைப்புப் பொருள் : மென் பொருள் அல்லது வன்பொருள்.